பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“எல்லாமே ஸ்வீட்டா இருக்கு!”

“எல்லாமே ஸ்வீட்டா இருக்கு!”
பிரீமியம் ஸ்டோரி
News
“எல்லாமே ஸ்வீட்டா இருக்கு!”

ஆர்.வைதேகி, படம்: கே.ராஜசேகரன்

ஊ...லலல்லா...உ...ஊ...லலல்லா... எனத் தமிழ்நாட்டையே ஆட்டம் போட வைத்தவரின் சீஸன் 2 இது. 20 வருடங்களுக்குப் பிறகு `விஐபி-2’ மூலம் மீண்டும் தமிழ் பேசியிருக்கிறார் கஜோல். சென்னை வந்திருந்தவரை தாஜ் கோரமண்டலில் சந்தித்தேன்.

`` `மின்சாரக் கனவு’க்கு அப்புறம் தமிழ் சினிமாவையே மறந்துட்டீங்களே?’’

‘` தமிழ் ரொம்ப ஸ்வீட்டான மொழி. அதன் உச்சரிப்பே ரொம்ப அழகா இருக்கும். `மின்சாரக் கனவு’ படத்துலேயே எனக்குத் தமிழ்ல பேசி நடிக்கிறது ரொம்ப ரொம்பக் கஷ்டமா இருந்தது. தினம் ஷூட்டிங் முடிச்சு வீட்டுக்குப்போனதும் மணிக்கணக்கா உட்கார்ந்து என் டயலாக்ஸைப் படிச்சுத் தெரிஞ்சுக்கிறது பெரிய வேலையா இருந்தது. அதனால்தான், தனுஷும் சௌந்தர்யாவும் ‘விஐபி 2’ல நடிக்கக் கேட்டு  என்கிட்ட பேசினப்போ, ‘ஐயோ... என்னால முடியாது. எனக்குத் தமிழ் கம்ஃபர்ட்டபிளா இல்லை’னு சொன்னேன். ‘அதைப்பற்றிக் கவலைப்படாதீங்க... படத்துல நீங்க பெரும்பாலும் இங்கிலீஷ்லதான் பேசுவீங்க’னு என்னை கன்வின்ஸ் பண்ணினாங்க. ஒரு மொழியை முழுமையா தெரிஞ்சுக்காம, புரிஞ்சுக்காம அந்தப் படத்துல நடிக்கிறபோது என்னோட 100 பெர்சென்ட்டைக் கொடுக்க முடியும்னு எனக்குத் தோணலை.

“எல்லாமே ஸ்வீட்டா இருக்கு!”

‘விஐபி-2’ படத்தோட க்ளைமாக்ஸ்ல ஒரு டயலாக். செம நீளம். கிட்டத்தட்ட அரைப் பக்கம். அதைப் பேசி நடிக்கிறதுக்கு ரொம்பவே கஷ்டப்பட்டேன்.  என் அனுபவத்தால், எப்படியோ சமாளிச்சு நடிச்சுட்டேன்.’’
 
`` `விஐபி-2’ படத்துல உங்களுக்கு நெகட்டிவ் கேரக்டர்தானே?

‘`இல்லை. இது இரண்டு வேற வேற பெர்சனாலிட்டிகளைப் பற்றிய கதை. ரெண்டு ஸ்ட்ராங் ஐடியாலஜி உள்ளவங்களோட , ரெண்டு ஸ்ட்ராங் ஆளுமைகளுக்கிடையிலான மோதல். ரெண்டு கேரக்டர்களுக்கும் அவங்கவங்க தரப்பு நம்பிக்கைகளும் நியாயங்களும் இருக்கும். பொதுவான ஒரு கருத்துக்கு வரும்வரை ரெண்டு பேருமே அடுத்தவங்களோட கருத்துகளுக்கு மதிப்புக் கொடுக்க மாட்டோம்.’’

``சௌந்தர்யாவோட டைரக்‌ஷன் ஸ்டைல் எப்படி இருந்தது?’’

‘`ஹார்டு வொர்க்கர். எல்லாம் கரெக்டா நடக்கணும்னு நினைக்கிறவங்க. நான் இன்னும் முழுப்படமும் பார்க்கலை. வெறும் பத்து நிமிஷப் படம்தான் பார்த்தேன். பிரமாதமா வந்திருக்கு. முழுப்படத்தையும் பார்க்க ஆவலோடு காத்திட்டிருக்கேன்.’’

“எல்லாமே ஸ்வீட்டா இருக்கு!”

``தனுஷ்கூட நடிச்ச அனுபவம்?’’

‘`அவரும் ரொம்ப ஸ்வீட். நான் வியந்து பார்க்கிற யங் டேலன்ட்.  ஷூட்டிங் முழுக்க என்கூடவே இருந்தார். ஒவ்வொரு டயலாக்கையும் எப்படிப் பேசணும்னு சொல்லிக்கொடுத்தார். செளந்தர்யா, தனுஷ் ரெண்டு பேரும் நிறைய ஹெல்ப் பண்ணினாங்க. எனக்கு நீங்களே டப் பண்ணிடலாமேனு சௌந்தர்யாகிட்ட கேட்டேன். ‘மேம்... என் வாய்ஸ் உங்களுக்கு மேட்ச் ஆகாது’னு சொல்லிட்டாங்க. அவங்களோட ரொம்ப ஜாலியா நேரம் போச்சு.’’

``பிரபுதேவா, அர்விந்த் சுவாமிகூடவெல்லாம் பேசறதுண்டா?’’

‘`பிரபுதேவா என் கணவர்கூட சேர்ந்து சமீபத்துல ஒரு படம் பண்ணினார். அந்த ஷூட்ல ரெண்டு முறை அவரை மீட் பண்ணினேன். அவரும் ரொம்பவே ஸ்வீட்டான மனிதர்.’’

``தமிழ்ப்படங்கள் பார்ப்பதுண்டா?’’

‘`பொதுவாகவே நான் படங்கள் அதிகம் பார்க்கிறதில்லை. படம் பார்க்கிறதைவிடவும் புத்தகங்கள் படிக்கிறதுலதான் எனக்கு ஆர்வம் அதிகம்.’’

``நட்சத்திர ஜோடிகள் நிஜ வாழ்க்கையில் இணைகிற போது, பலருக்கும் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிகிறது. உங்களுடைய வெற்றிகரமான மணவாழ்க்கையின் ரகசியம் என்ன?’’

‘`நட்சத்திரத் தம்பதியா, சாதாரண ஜோடியாங்கிறதெல்லாம் பிரச்னை இல்லை. எந்தத் திருமண உறவும் வெற்றிகரமா தொடரணும்னா, அதுக்கு ரெண்டுபேரும் மெனக்கெடணும். அது ஒருத்தரோட பொறுப்பு மட்டுமில்லை. வேலன்டைன்ஸ் டேவுக்கு என்ன பண்ணினீங்கனு யாராவது என்னைக் கேட்கிறப்போ சிரிப்பா வரும். அது வருஷத்துல ஒரே ஒருநாள். ரோஜாப்பூ கொடுக்கிறது, ஸாரி கேட்கிறதுனு அன்னிக்கு ஒருநாளோட முடிஞ்சுபோற விஷயமில்லை காதல். தினம் தினம் செய்யப்பட வேண்டியது. உங்களோட பார்ட்னருக்காகக் கொஞ்சமாவது எக்ஸ்ட்ரா டைம் ஒதுக்கணும். நீங்க அப்படிப் பண்ணினீங்கன்னா, அவங்களும் நேரத்தையும், அன்பையும், அக்கறையையும் உங்களுக்குத் திருப்பிக் கொடுப்பாங்க. எல்லா நாளும் உங்களால பெர்ஃபெக்ட் அம்மாவா, பெர்ஃபெக்ட் மனைவியா, இருக்க முடியாதுதான். சில நாள்கள் வேற மாதிரியும் இருக்கும். அந்த யதார்த்தத்தையும் புரிஞ்சுக்கிட்டு செட்டிலாக ரெண்டு பேருக்கும் கொஞ்சம் பொறுமையும் அவசியம்.’’

``அஜய் தேவ்கன் நல்ல கணவரா? நல்ல அப்பாவா?’’

‘`ரெண்டும்னு சொல்லத்தான் ஆசை. உண்மையைச் சொல்லணும்னா, அவர் நல்ல அப்பா.’’

“எல்லாமே ஸ்வீட்டா இருக்கு!”

``குழந்தைங்க என்ன பண்றாங்க? உங்க படங்களைப் பார்த்து கமென்ட் பண்ணுவாங்களா?’’

‘`பையன் யுக்; ஆறரை வயசாகுது. ரொம்ப ஸ்வீட். பொண்ணு நிஸாவுக்கு 14 வயசு. ரெண்டு பேரும் செம வாலுங்க. பொண்ணுக்கு பயங்கரமான சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் உண்டு. புத்திசாலி. பன்ச் டயலாக் சொல்லிப் பின்னியெடுப்பா.

ரெண்டு பேரும் எப்பவாவது என் படங்களைப் பார்ப்பாங்க. அந்த விஷயத்துல பொண்ணு கொஞ்சம் ஷார்ப். `தில்வாலே’யைத் தவிர, என்னோட வேற எந்தப் படத்தையும் அவ முழுசா பார்த்ததில்லை.
பொண்ணுக்கும் சரி பையனுக்கும் சரி, நான் படத்துல அழுதா பிடிக்காது. ‘அப்பாவைப் பாரு, ‘கோல்மால்’ படத்துல அப்பாவோட கேரக்டர் சூப்பரா இருக்கு. அது மாதிரி நடிம்மா’னு சொல்வாங்க. ‘கோல்மால் கேரக்டர்ல நானா?’ன்னு சிரிப்புதான் வரும்.’’

``42 வயசுல வாழ்க்கை எப்படியிருக்கு? 20 வருஷங்களுக்கு முன்னாடி பார்த்தது போலவே இருக்கீங்களே.. எப்படி?’’

‘`என் மனசுக்குத் தெரியும், நான் அதே மாதிரி இல்லைங்கிறது. 19 வயசுல இருந்ததைவிடவும் 42 வயசுல லைஃப் இன்னும் அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கு.’’