
News
ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி
``தலைவரும் டாக்டர் மாதிரிதான்!”

“எப்படி?”
“கொள்கைகளைச் சொல்லிச் சிரிக்கவெச்சுப் பல பேர் நோயைக் குணப்படுத்துறாரே!’’
- தே.ராஜாசிங் ஜெயக்குமார்

``தன் வீட்டுக் கல்யாணத்துல தலைவர் அல்பமா நடந்துகிட்டாரா?"
``மொய் கவருக்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு வெச்சிட்டாரே!’’
- பி.ஜி.பி.இசக்கி

``உங்க காதல் கல்யாணத்துக்கு, எப்படி வீட்டில் சம்மதிக்க வைச்சீங்க!”
“எங்க பெயரை ‘பான்’, `ஆதார்’னு மாத்திக்கிட்டோம். ஏன் வம்புன்னு, சேர்த்துவெச்சுட்டாங்க!”
- கி.ரவிக்குமார்

``நம்ம கட்சி ஆபீஸ்ல பிக் பாஸ் நடத்தணும்!’’
``14 பேருக்கு எங்கே போறது தலைவரே?’’
- அம்பை தேவா