
News
ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி
“காமெடிச்சேனல் போட்டா, எங்க தாத்தா கடுப்பாயிருவார்!”
“அப்புறம்!”

“நியூஸ் சேனல் போட்டாத்தான் விழுந்து விழுந்து சிரிப்பார்!”
- கி.ரவிக்குமார்

“இன்னைக்கு நான் என்ன பேசணும்?”
“சென்னை ஏர்போர்ட்டுல இந்த கருத்தைச் சொல்றீங்க... டெல்லி ஏர்போர்ட்டுல அதை அப்படியே மாத்தி சொல்றீங்க, தலைவரே!”
- ஏந்தல் இளங்கோ

``என்னங்க ...
ஏன் டென்ஷனா இருக்கீங்க?”
``வைஃபை இல்லாத ஆபீஸூக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க!”
- பெ.பாண்டியன்

“உண்மையை சொல்லு... பால்ல ஏதோ ரசாயனம் கலந்தியே, அது என்ன?”
“அட, இது சர்க்கரைங்க!”
- கி.ரவிக்குமார்