என் விகடன் - மதுரை
என் விகடன் - திருச்சி
Published:Updated:

சினிமா விமர்சனம் : மயக்கம் என்ன

விகடன் விமர்சனக் குழு

##~##

காதல், லட்சியம் இரண்டிலும் மனசு சொல்கிற திசையில் செல்லும் ஒருவன் கரை சேர்ந்தானா என்று சொல்லும் 'மயக்கம் என்ன’!

 வைல்டு லைஃப் போட்டோகிராஃபியில் சாதிக்க வேண்டும் என்பது தனுஷின் லட்சியம். நடுவில் நண்பனின் கேர்ள் ஃப்ரெண்ட் ரிச்சாவோடு காதல் டைவர்ட் கெமிஸ்ட்ரி பற்றிக்கொண்டு திருமணத்தில் முடிகிறது. பிரபல போட்டோகிராஃபரான ரவிப்ரகாஷ், தனுஷ் எடுத்த புகைப்படத்தை 'தனது’ என்று சொல்லி, பெருமைமிகு விருதை வெல்கிறார். அந்த விரக்தியில் மன நலம் பாதித்து, தான்தோன்றித்தனமாகத் திரிகிறார் தனுஷ். அவரது குடும்ப வாழ்க்கை யும் சாதனைக் கனவும் என்ன

சினிமா விமர்சனம் : மயக்கம் என்ன

ஆகின்றன என்பது க்ளைமாக்ஸ்!      

முதல் பாதி அக்மார்க் செல்வராகவன் அல்வா. ரிச்சாவை அவரது நண்பன் தனுஷ§க்கு அறிமுகப்படுத்தும்போதே 'ஆஹா... ஆரம்பிச்சிட்டாங்கப்பா’ எனப் பரவச கமென்ட்டுகள் பறக்கின்றன. பாதிப் பைத்தியமாகத் திரியும் தனுஷ், நள்ளிர வில் ரிச்சாவை எழுப்பி போஸ் தரச் சொல்வதும் 'கார்த்திக் ஜாக்கிரதை’ என போர்டு அடிப்பதுமாக ஒரு கிரியேட்டரின் கறுப்புப் பக்கங்களைக் காட்டிய விதம்... புதிது. ஆனால், அதைக் காட்டிய விதம் ரொம்பவே நீ...ள...ம்.

படத்துக்குப் படம் மெருகேறுகிறார் தனுஷ். 'ஏதோ தப்பா இருக்கே’ என ரிச்சா விஷயத்தில் குழம்பித் திரிவது, 'சார், உங்க அசிஸ்டென்டா சேர்த்துக்கங்க சார்’ என வாய்ப்புக்காகக் குறுகி நிற்பது, 'கெட்ட மூட்ல இருக்கேன்... பேசாத’ என விரக்தியில் வெடிப்பது என எல்லாத் திசைகளிலும் சிக்ஸர் அடிக்கிறார். அத்தனை பெரிய கண்களாலேயே அனைத்தையும் பேசிவிடுகிறார் ரிச்சா. தனது ரத்தத்தைத் துடைத்தபடியே இயலாமையும் ஆவேசமுமாக சைகைகளால் தனுஷை அதட்டி அடக்குமிடத்தில்... அட!

தனுஷின் நண்பனாக வரும் சுந்தர் பெர்ஃபெக்ட் ஃபிட். நண்பனை மடியில் சாய்த்து 'பூவே பூச்சூடவா’ பாடுவதும் தனுஷ் - ரிச்சா  காதல் விஷயம் தெரிந்து சரக்கடித்துப் பொங்குவதும் கல்யாணத்தில் 'ஈஈஈ’ என ஆசீர்வாதம் வழங்குவதுமாக ஈர்க்கிறார்!  

ஜி.வி.பிரகாஷின் இசையும் ராம்ஜியின் கேமராவும்தான் படத்தின் ரியல் ஹீரோக்கள். 'காதல்... என் காதல்..’, 'பிறை தேடும்...’, 'நான் சொன்னதும்...’, 'ஓட ஓட...’ எனப் பாடல் களிலும் பின்னணி இசையிலும் ஜி.வி.பி. அடுத்த கட்டத்தைத் தொட்டுவிட்டார். ஒரு புகைப் படக்காரனின் வாழ்க்கை அத்தியாயங்களை நிழலும் வண்ணங்களுமாகக் காட்சிப்படுத்தி இருக் கிறது ராம்ஜியின் கேமரா!  

சினிமா விமர்சனம் : மயக்கம் என்ன

தனுஷ§ம் ரிச்சாவும் மழை அடிக்கிற பஸ் ஸ்டாப்பில் கட்டிக்கொள்ளும்போது 'சுந்தர் காலிங்’ என மொபைல் அலறுவதும் நண்பர்களைச் சமாதானப்படுத்த சுந்தரின் அப்பா இருவருக்கும் கிளாஸில் சரக்கை ஊற்றி ஊற்றி நீட்டுவதுமாக ஆங்காங்கே 'அபாயக் கட்டம்’ தாண்டி எகிறுகிறது யூத் பல்ஸ்.  

இந்த ஆள்மாறாட்டக் காதல் கோக்குமாக்கை விட மாட்டீங்களா செல்வா?    

ஆங்காங்கே அசரடித்தாலும் வழக்கமான காதல் ட்ரீட்மென்ட்டும் செம நீளமான திணறவைக்கும் திரைக்கதையும் 'மயக்கம் என்ன செல்வா?’ எனக் கேட்கவைக்கின்றன!