சினிமா
Published:Updated:

“கமல் சார் எனக்குக் கடவுள் மாதிரி!”

“கமல் சார் எனக்குக் கடவுள் மாதிரி!”
பிரீமியம் ஸ்டோரி
News
“கமல் சார் எனக்குக் கடவுள் மாதிரி!”

சனா - படங்கள்: கே.ராஜசேகரன்

 தமிழ்நாடே ஓவியா ஃபீவரில் இருக்க செம உற்சாகத்தில் இருக்கிறார் ஓவியா. ``நிறைய பேசணும். ஆனா எல்லாத்தையும் பேச முடியுமான்னு தெரியல” என கேஷுவலாகப் பேசுகிறார். ஓவியாவுடன் காரில் சென்னையைச் சுற்றிக்கொண்டே பேசிய அரை மணி நேரமும் சிரிப்பு, கலாய்ப்பு, அழுகை என உருக வைத்தார் ஓவியா.

“கமல் சார் எனக்குக் கடவுள் மாதிரி!”

``அப்புறம்... சொல்லுங்க, எப்படி இருக்கீங்க?’’

``இப்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன். கொஞ்சம் மன உளைச்சல்ல இருந்ததால்தான் பிக்பாஸ் வீட்டிலிருந்தே வெளியே வந்தேன். வெளியே வந்ததும் மனசு ஒரு மாதிரி இருந்துச்சு. சாப்பிடப் பிடிக்கல. தூக்கம் வரல. நான் நானாவே இல்ல. என்னைச் சுத்தி எப்போதும் இருந்த மைக்கையும்,  கேமராவையும் ரொம்ப மிஸ் பண்ணுனேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாத்தான் வழக்கமான   லைஃப்புக்கு வந்து,  ஃபேஸ்புக், ட்விட்டர் எல்லாம் பார்த்தேன். செம சந்தோஷம்.  எனக்கு இவ்ளோ மக்கள் சப்போர்ட்டானு ஆச்சர்யமா இருந்துச்சு.  அப்புறம் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாம்னு  `வெர்கலா’ போயிட்டு வந்தேன். ட்ரிப்பை நல்லா என்ஜாய் பண்ணுனேன். எனக்கு டூர் போறது அவ்ளோ பிடிக்கும். இப்போ ஐ’ம் நார்மல்.’’

``பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்ததுதான் ரியல் ஓவியாவா?’’

``எந்தக் கவலையும் இல்லாம குழந்தைகள் ரொம்ப ஹேப்பியா இருப்பாங்க. அதுமாதிரிதான் நானும். எனக்குள்ள நிறைய குழந்தைகள் இருக்கு. அதனால்தான், குழந்தைத்தனமா இருக்கேன். பிக்பாஸ் வீட்டுக்குள்ளே நீங்க பார்த்ததுதான் ரியல் ஓவியா.’’

``ஹெலன் எப்படி ஓவியாவா மாறினாங்க?’’

``சின்ன வயசிலிருந்தே ரொம்ப சுதந்திரமா  இருக்கணும்னு நினைக்கிற பொண்ணு நான்.   யாருகிட்டயும் எந்த ஹெல்ப்பும் கேட்கமாட்டேன். என் செலவைக்கூட நானே பார்த்துக்குவேன். அந்த வயசுல பணம் சம்பாதிக்க என்ன பண்ணலாம்னு யோசிச்சப்பதான் மாடலிங் சான்ஸ் வந்துச்சு. மாடலிங், சின்னச் சின்ன விளம்பரங்கள்  பண்ண ஆரம்பிச்சேன். என் பாக்கெட் மணிக்கு அது சரியா இருந்துச்சு. அப்போதான் என் மாடலிங் போட்டோஸ் பார்த்துட்டு ‘களவாணி’ படத்தின் டைரக்டர் கூப்பிட்டார். ‘களவாணி’ படத்திலிருந்து ஹெலன் ஓவியாவா மாறியாச்சு.’’

``பிக்பாஸ் ஷோ பற்றி நல்லா தெரிஞ்சுதானே உள்ள போனீங்க. பாதியிலயே வெளியே வந்துட்டோமேன்னு ஃபீல் பண்ணுனீங்களா?’’

``எனக்கு எதையாவது புதுசு புதுசா எக்ஸ்பீரியன்ஸ் பண்ணிட்டே இருக்கணும்.  அனுபவங்கள்தான் ரொம்ப முக்கியம்னு நினைப்பேன். அது புது மனுஷங்ககூடப் பழகறப்பதான் கிடைக்கும். அதனால புது மனுஷங் களைப் பார்க்க, அவங்ககிட்ட பேச ரொம்பப் பிடிக்கும். என்னோட ஆசைகள் ஒவ்வொண்ணா நிறைவேத் திட்டே இருக்கும்போதுதான் பிக்பாஸ் சான்ஸ் வந்துச்சு.

“கமல் சார் எனக்குக் கடவுள் மாதிரி!”

ஒரு ரியாலிட்டி ஷோ அப்படிங் குறதையும் தாண்டி அந்த வீட்டுக்குள்ளே இருக்கிறது ஒரு புது அனுபவமா இருக்கும்னுதான் நான் பிக்பாஸ் ஷோ-க்கு ஓகே சொன்னேன். பிக் பாஸ் வீட்ல இருந்த சில நாள்களிலேயே எனக்கு அந்த அனுபவம் கிடைச்சிருச்சு. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் திரும்பவும் வீட்டுக்குள்ளே போகணும்னு தோணுச்சு. ஆனா, அப்பா அதை விரும்பல. கொஞ்சம் பயந்துட்டார். வீட்ல அப்பா, பாட்டி, என் செல்ல நாய்க்குட்டினு ரொம்பக் குட்டியான குடும்பம் எங்களுடையது. திரும்பவும் பிக் பாஸ் வீட்டுக்குள்ளே போய் ஏதாவது கஷ்டம் எனக்கு வந்துருமோனு அப்பா யோசிச்சார். அதனால்தான் நான் திரும்பவும் அந்த வீட்டுக்குள்ளே போகல.’’

``பிக்பாஸ் உங்களுக்கு நிறைய புகழ் கொடுத்திருக்கு. இப்ப பணமும் கொடுக்க ஆரம்பிச்சிருக்கு. என்னென்ன படங்கள் பண்றீங்க?’’

``உண்மையைச் சொல்லணும்னா, பிக்பாஸ் முன்னாடி சினிமா சான்ஸ் ரொம்ப கம்மியா இருந்துச்சு. ஆனா, இப்போ நிறைய சான்ஸஸ் வருது.  பட், இவ்ளோ சான்ஸஸ் வருதுனு எல்லாப் படத்துலயும் நடிக்க விரும்பல. எனக்குப் பிடிச்ச படங்கள் மட்டும் பண்றதுன்னு தெளிவா இருக்கேன். இப்போதைக்கு  `காஞ்சனா 3’ மட்டும்தான் பண்றேன். எனக்கு `காஞ்சனா’ படம் ரொம்பப் பிடிக்கும். அதனால்தான் லாரன்ஸ் கேட்டவுடன் படத்தில் நடிக்கச் சம்மதிச்சேன். எந்த இமேஜுக்குள்ளயும் சிக்காம நல்ல படங்கள் பண்ணணும்னு நினைக்கிறேன்.’’

`` `ஓவியா ஆர்மி’ பத்தி என்ன நினைக்கிறீங்க?’’

``ரொம்ப ரொம்ப ஹேப்பி. ஓவியா ஒரு நடிகையா இருக்கும்போது எனக்கு இவ்ளோ ஃபேன் ஃபாலோயர்ஸ், சப்போர்ட் இல்ல. என் நடிப்புக்காக ஓவியா ஆர்மி வரல. என்னுடைய ரியல் கேரக்டரைப் பார்த்துட்டுத்தான் இவ்ளோ ரசிகர்கள். பிக் பாஸ் வீட்டுக்குள்ளே இருக்கும்போதே மக்களுக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு எனக்குத் தெரிஞ்சுச்சு. ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமை வரும்போதும் கமல் சார், ‘ஓவியா, உங்கள் பேக்கையெல்லாம் பேக் பண்ணிட்டீங்களா’னு கேட்பார். `யெஸ்’னு தலையாட்டுவேன். ஆனா, எனக்குத் தெரியும், ஃபேன்ஸ் என்னைக் காப்பாத்திடுவாங்கனு. ஃபேன்ஸூக்கு என்னைப் பிடிச்சிருக்குனு தெரிஞ்சுச்சு. ஆனா, இந்தளவுக்கு,  ஓவியா ஆர்மி எல்லாம் இருக்கும்னு தெரியாது. இதெல்லாம் ஓர் ஆசீர்வாதம். எல்லோருக்கும் கிடைக்காது. ரொம்ப சந்தோஷம்.’’

``வெளியே வந்ததும் செலிபிரிட்டீஸ் யாரெல்லாம் போன் பண்ணுனாங்க?’’

``பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததுமே என் போன் நம்பரை மாத்திட்டேன். அதனால் எனக்கு யாரும் நேரடியா போன் பண்ணமுடியல. நண்பர்கள் மூலமா சிவகார்த்திகேயன் கூப்பிட்டுப் பேசினார். `ரொம்ப ஹேப்பியா இருக்கு ஓவியா. பிக் பாஸ் உங்களுக்குக்காகவே டெய்லி பார்ப்பேன்’னு சொன்னார்.

அப்புறம் கீர்த்தி சுரேஷ் என்னை நேரா வீட்டுக்கே வந்து பார்த்தாங்க. என்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டாங்க. அதுக்கு முன்னாடி கீர்த்தியை நான் பார்த்ததே இல்லை. ஒரு ஆக்ட்ரஸ் இன்னொரு ஆக்ட்ரஸைப் புகழ்கிறதெல்லாம் பெரிய விஷயம். எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு.  அப்புறம் சிம்பு. எல்லோருக்குமே ரொம்ப நன்றி.’’

“கமல் சார் எனக்குக் கடவுள் மாதிரி!”

``பிக் பாஸ் கமல் பற்றிச் சொல்லுங்க?’’

``ஸ்கூல் போற பசங்களுக்கு எப்படா சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை வரும்னு இருக்குமோ அப்படித்தான் எனக்கும் இருக்கும். அவரைப் பார்க்க  அவ்ளோ ஆர்வமா இருப்பேன். ரொம்ப மன உளைச்சல்ல இருந்தப்பெல்லாம் யாராவது நம்மகிட்ட பேசினா நல்லாயிருக்கும்னு தோணும். அதைக் கமல் பண்ணுவார். அவரைப் பார்த்தாலே புது உற்சாகம் வரும். பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். அவருடைய ஸ்டைல், ஷோ பண்ணுற விதம் எல்லாம் எனக்குப் பிடிக்கும். எனக்கு ரொம்பப் பிடிச்சவங்ககிட்ட அதிகமா பேச மாட்டேன். கொஞ்சம் ஒதுங்கிப் போவேன். கமல் சாரை  தூரத்திலிருந்து அவ்ளோ ரசிப்பேன். அவர் எனக்குக் கடவுள் மாதிரி. ‘மன்மதன் அம்பு’ படத்தில் நடிக்கும்போது எனக்கு அவருடன் சீன்ஸ் இல்லை. அப்போ கஷ்டமா இருந்துச்சு. அப்புறம் ஒருமுறை ஃப்ளைட்டில் பார்த்திருக்கேன். அவ்ளோதான். ஆனா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமா  என் ஆசையெல்லாம் நிறைவேறிடுச்சு.’’

``பிக்பாஸ் வீட்டுக்குள்ள நீங்க டாக்டர்ஸ்கிட்ட பேசுறதைப் பார்த்தோம். டாக்டர்ஸ் உங்ககிட்ட என்ன சொன்னாங்க?’’

``பிக்பாஸ் வீட்டுக்குள்ளே எனக்கு மூணு முறை கவுன்சலிங் கொடுக்க டாக்டர்ஸ் வந்தாங்க. என்கிட்ட நிறைய நேரம் பேசினாங்க. (தேம்பித் தேம்பி அழுகிறார்). ஸாரி ப்ளீஸ்...’’

``பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருந்த கொஞ்ச காலத்திலேயே  எப்படி ஆரவ்வை அவ்ளோ பிடிச்சிருச்சு?’’

``ஆரவ், ரொம்ப ஸ்ட்ராங்கான பெர்ஸன். அவர் ரொம்ப கம்போஸ்டான ஆள். கோபம்கூட அவ்வளவு சீக்கிரம் ஆரவ்க்கு வராது. அதனாலகூட அவரை எனக்குப் பிடிச்சிருக்கலாம்.’’

``ஆரவ் பிக் பாஸ் டைட்டிலை ஜெயிப்பார்னு நினைச்சீங்களா?’’

``சினேகன், ஆரவ் ரெண்டு பேரில் யாராவது நிச்சயம் பிக் பாஸ் டைட்டிலை வின் பண்ணுவாங்கன்னு நினைச்சேன். நூறு நாளை நிச்சயம் ஆரவ் கம்ப்ளீட் பண்ணுவார்ங்கிற கான்ஃபிடன்ஸ் எனக்கு இருந்துச்சு.’’

``ஆரவ்கூட சேர்ந்து நடிப்பீங்களா?’’


``எங்களுக்குள்ள எந்தப் பிரச்னையும் இல்ல. கதை பிடிச்சிருந்தா நிச்சயம் நடிப்பேன்.’’