சினிமா
Published:Updated:

“பேய்ப் படம்னா பயந்து சாகணும்!”

“பேய்ப் படம்னா பயந்து சாகணும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“பேய்ப் படம்னா பயந்து சாகணும்!”

பா.ஜான்ஸன் - படம்: தே.அசோக்குமார்

‘ஜில் ஜங் ஜக்’ படத்துக்குப்பிறகு படு சைலன்ட்டாக இருக்கிறார் என்று பார்த்தால், வெளியே தெரியாமல் `அவள்’ என்ற படத்துக்குக் கதை எழுதி, நடித்து முடித்து, ‘இன்னும் நான்கு படங்களிலும் கமிட் ஆகியிருக்கேன் ப்ரதர்’ என்கிறார் சித்தார்த்.

“படம் பற்றி வெளிய சொல்லாததுக்குக் காரணம், எந்தத் தடங்கலும் இல்லாம எடுத்து முடிச்சிட்டு அப்புறமா பேசிக்கலாம்னு நினைச்சது தான். இடையில் யாராச்சும் என்ன பண்றீங்கனு கேட்டா கூட, நேரம் வரும்போது நானே சொல்றேன்னு தவிர்த்திடுவேன்.   தவிர, இன்னைக்கு இருக்கிற டெக்னாலஜியில் பெரிய ஹீரோக்களோட படங்களே ஈஸியா இணையத்துல லீக் ஆகுது. அதான் கொஞ்சம் பயத்தோடும் ஜாக்கிரதை யோடும் இருக்க வேண்டியிருக்கு.  அதையும் மீறிப் படம் பற்றித் தெரிஞ்சுக்கிட்ட சிலர்,  ‘என்னடா நீ ‘அவள்’னு ஒரு படம் எடுக்கற, எதாவது ஹீரோயிஸக் கதை பண்ணலாம்ல?’னு சொன்னாங்க. இந்தப்படத்தை நான் ஒழுங்கா எடுத்துக் கொடுத்துட்டாலே அது பெரிய ஹீரோயிஸம்தானே?” 

“பேய்ப் படம்னா பயந்து சாகணும்!”

“ `அவள்’ என்ன மாதிரியான படம்?”

“படத்தோட இயக்குநர் மிலிந்த் ராவும் நானும் மணி சார்கிட்ட உதவி  இயக்குநர்களா இருக்கும்போது பழக்கம். ஒரே நேரத்துல மூணு ஸ்கிரிப்ட்  ரெடி பண்ணிட்டிருந்தோம். ஒரு கட்டத்துல மத்த ரெண்டு கதைகளைப் பக்கத்துல வெச்சிட்டு, ‘அவள்’ கதையை டெவலப் பண்ண ஆரம்பிச்சோம். ஏன்னா, இது இன்டஸ்ட்ரிக்கே புது ஜானர் படமா அமையும்னு தோணுச்சு. ‘எல்லோரும் பயந்து சாவப் போறீங்க’னு சொல்றதோட நிற்காம உண்மையாவே எல்லோரையும் பயமுறுத்தும்படியான ஒரு படம் பண்ணணும்னு ஆசை. ‘அவள்’ அப்படியே அமைஞ்சிருக்கு. தமிழ்ல ஹாரர் படங்களை யாரும் முழுமையா கையாளலையோனு தோணுச்சு. வெளிநாட்டுப் படமோ, பாலிவுட் படமோ, பேய்ப் படங்கள்ல காமெடி இருக்காது. ஆனா, இங்கே அது சகஜமா நடக்குது. நானேகூட ‘அரண்மனை’ படம் பண்ணேன்.  ரொம்ப பயமுறுத்துனா பார்க்க மாட்டாங்கனு இங்கே ஒரு நம்பிக்கை இருக்கு. அது பொய். இல்லைனா, ‘கான்ஜூரிங்’ மாதிரி ஒரு டப்பிங் படம்  இங்கே கோடி கோடியா வசூலிச்சுக் கொடுத்திருக்காது.  ‘அவள்’ படமும் அப்படி இருக்கும். முழுக்க ஹாரர் விரும்பிகளுக்கு மட்டுமே தீனி போடுற ஒரு படம். இதுவரை தமிழ்ல யாரும் பார்க்காத மாதிரி திகில் படமா இது இருக்கும்.”

“பேய்ப் படம்னா பயந்து சாகணும்!”

“ ‘காவியத் தலைவன்’, ‘எனக்குள் ஒருவன்’, ‘ஜில் ஜங் ஜக்’னு நீங்க பண்ணுன சில எக்ஸ்பரிமென்ட்ஸ்...”

கேள்வியை முடிக்கும் முன்பே பதறியபடி, “ஐயோ, எக்ஸ்பரிமென்ட்டுங்கிற வார்த்தைய கேட்டாலே பயமா இருக்கு. அந்த வார்த்தையைப் பயன்படுத்திப் பேசும்போது, ‘அது ஓடாத படமாச்சே’னு சொல்ற மாதிரி இருக்கு. நீங்களே இந்த லிஸ்ட்ல `ஜிகர்தண்டா’வ விட்டுட்டீங்க. உங்க பாஷைல அதுவும் எக்ஸ்பரிமென்ட் படம்தான்.  ஆனா, எனக்கு அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நான் என்ன நினைச்சு சினிமாவுக்கு வந்தேனோ, அதைப் பண்ணிட்டிருக்கும் பயணம்தான் என்னுடைய படத் தேர்வுகள். அந்தப் படம் மூலமா நடிகனாவோ, டெக்னீஷியனாவோ என்னால ஏதாவது கத்துக்க முடியும்னா பண்ணுவேன்.”

“ஒரு தயாரிப்பாளரா இப்போதைய சினிமாச் சூழலை எப்படிப் பார்க்கிறீங்க?”

“எனக்குப் புடிச்ச மாதிரி ஒரு படத்தை எடுக்கற சுதந்திரத்தை இந்தத் துறையும், ஆடியன்ஸும் கொடுக்கறாங்கனா அதைவிட சந்தோஷம் உலகத்துல வேற எதுவும் இல்ல. ஆனா, நம்மளைச் சுத்தி நடக்குற விஷயங்களைத் தாங்கிக்கிட்டு நாம நினைச்சதை செய்றதுதான் இங்கே சவாலா இருக்கு. யாருமே ஓடாத படம் எடுக்கணும்னு நினைக்கறது கிடையாது. அதே மாதிரி இந்தப் படத்தில் கொஞ்சம் கம்மியா உழைப்போம்னும் நினைக்க மாட்டாங்க. எல்லாப் படத்திலும் உழைப்பு ஒண்ணுதான். எல்லாப் படமும் ‘ப்ளாக்பஸ்டர் ஆகும்’ங்கிற நம்பிக்கைல எடுக்கப்படும் படங்கள்தான்.

“பேய்ப் படம்னா பயந்து சாகணும்!”

இப்போ, ‘அவள்’ படத்தையே எடுத்துக்கோங்க. இதுக்காகப் பல மாதங்கள் உழைச்சிருக்கோம். அந்த நேரத்தில் வேற ட்ரெண்டுல படம் எடுத்திட்டிருப்பாங்க, பத்து ரூபாய் போட்டு நூறு ரூபாய் எடுத்திருப்பாங்க. இதையெல்லாம் பார்க்கும்போது எதுவும் நம்மளைப் பாதிக்காம உங்க படத்தின் கருவை மட்டும் முன்னாடி எடுத்துட்டுப் போகணும். அது இங்கே சிரமமான விஷயமா இருக்கு. இது ஒரு தயாரிப்பாளரா நான் கத்துக்கிட்டது.”

“திருமண வாழ்க்கைல இருந்து வெளியே வந்துட்டீங்க. அதன்பிறகு காதல் கிசுகிசுக்களும் நிறைய வந்தது. மீண்டும் கல்யாணம் பண்ற ஐடியா இருக்கா?’’

`` ‘எப்போ கல்யாணம்’ங்கிற கேள்வி எல்லாம் வர்ற வயசை நான் தாண்டிட்டேன்னு நினைக்கிறேன். 38 வயசுல இந்தக் கேள்வி எனக்கு முக்கியமானதா தோணல.”