
News
ஓவியங்கள்: கண்ணா
“டாக்டர்! வயிறு ரொம்ப வலிக்குது”
“உங்களுக்கு மெடிக்கல் இன்ஷூரன்ஸ் இருக்கா?”

“ஏன் டாக்டர்?”
“இன்ஷூரன்ஸ் இருந்தா ரொம்ப சீரியஸான வலி. உடனே அட்மிட் ஆகணும். இன்ஷூரன்ஸ் இல்லைனா வெறும் அஜீரணம்தான். ஜெலுசில் குடிச்சா சரியாப் போயிடும்”
- ப்ரணா
"அந்தக் கட்சில டெக்னாலஜி வளர்ச்சி அதிகமா இருக்குன்னு எதை வெச்சுச் சொல்ற?”

“வர்ற தேர்தல்ல ஓட்டுக்கு ‘பிட் காய்ன்’ கொடுக்கப்போறாங்களாம்!”
- இரா.வசந்தராசன்
“ஒரே நைட்ல நகைக்கடை, ஜவுளிக்கடை, மளிகைக்கடைன்னு திருடியிருக்கியே?”

“எனக்கு சும்மா இருக்கவே பிடிக்காதுங்க எசமான்.”
- இரா. வசந்தராசன்
“எனக்கு முடி ரொம்பக் கொட்டுது”
“அதுக்கெல்லாம் ஏன்யா இவ்ளோ வருத்தப்படறீங்க?”

“சும்மாவா? 2000 ரூவா கொடுத்து வாங்கின ‘விக்’ ஆச்சே!”
- குண. மோனிகா