
News
ஓவியங்கள்: கண்ணா

"ஆன்லைனில் முதல்வர் பதவிக்கு அப்ளை செய்ய இயலாதபோது 'டிஜிட்டல் இந்தியா' எனப் பீற்றிக்கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது எனக் கேட்கிறேன்!"
- பர்வீன் யூனுஸ்
"சொந்தமா ஒருபடம் தயாரிச்சீங்களே, என்னாச்சு? "

"அதைச் சொந்தமா ரிலீஸ்பண்ண ஒரு தியேட்டர் கட்டிட்டிருக்கேன்!"
- அதிரைபுகாரி
"அந்தப் பேய்ப் படத் தயாரிப்பாளர் வீட்டிலே ஏன் ரெய்டு?"

"பேய்களுக்கு நடிக்க சம்பளம்னு கணக்கு காட்டியிருந்தாராம்!"
- தே.ராஜாசிங் ஜெயக்குமார்
"போன வாரம்தானே லோன் வாங்கினீங்க... அதுக்குள்ள 'ட்யூ' கட்ட வந்துட்டீங்க?"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல, 'விசா' கிடைச்சிருச்சுன்னு சொல்லிட்டுப் போக வந்தேன்!"
- கல்லிடை வெங்கட்