பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

" இந்த வங்கிக்கு உள்நாடு, வெளிநாடு ரெண்டு இடத்திலும் வாடிக்கையாளர்கள் இருக்காங்களா? "

" ஆமாம்! டெபாசிட் செய்தவங்க உள்நாட்டிலும், கடன் வாங்கினவங்க வெளிநாட்டிலும் இருக்காங்க! "

 - ஏந்தல் இளங்கோ

ஜோக்ஸ் - 2

"த்தூ..என்னடி சட்னி இது..?"

"பேசாம சாப்பிடுங்க ..ஃபேஸ்புக்ல இதுதான் 1039 லைக்ஸ் வாங்கியிருக்கு"

- சி.சாமிநாதன்

ஜோக்ஸ் - 2

“ஏன்யா குடிச்சுட்டு காரை ஓட்டிப் போய் அந்த ஆள் மேல மோதினே?”

“நான் குடிக்காம ஓட்டிட்டுப் போனா கூட அந்த ஆள் மேல மோதி இருப்பேன் சார். எனக்குத்தான் காரே ஓட்ட தெரியாதே”

- வி.சாரதி டேச்சு

ஜோக்ஸ் - 2

“தலைவருக்குப் பாதுகாப்பைப் பலப்படுத்தியிருக்காங்க”

“நிஜமாவா?”

“ஆமாம். புழலில் இருந்து இப்ப திஹாருக்கு மாத்திட்டாங்க”

- வி.சாரதி டேச்சு