பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

"மன்னர் ஏன் அந்தப்புரத்தில் உறங்குவதில்லை?"

"மகாராணியார், ‘போர்,போர்' என்று குறட்டை விடுகிறாராம்!"

- வ.முருகன்

ஜோக்ஸ் - 3

“அந்த நடிகைக்கு ஓவர் பந்தானு எப்படி சொல்றே சிஸ்டர்?”

“பிளாஸ்டிக் சர்ஜரி வேணாம். பிளாட்டின சர்ஜரி பண்ண சொல்றாங்க டாக்டர்!”

- எஸ்.முகம்மது யூசுப்

ஜோக்ஸ் - 3

"படம் சரியா ஓடலைன்னு நஷ்ட ஈடு தரச்சொல்லி ஹீரோ வீட்டு வாசல்ல போராட்டம் பண்றாங்க .."

"யாரு ..?"

"திருட்டு வி.சி.டிகாரங்க ..!"

- சி.சாமிநாதன்

ஜோக்ஸ் - 3

"ஏதாவது தர்மம் பண்ணுங்க சாமி... "

"இந்தா என்னோட டெபிட் கார்டு பாஸ்வேர்ட் சொல்றேன்..

அஞ்சாயிரம் எடுத்துட்டு வந்து கொடுத்துட்டு ஐநூறு ரூபாய் வாங்கிக்கோ!"

- சீர்காழி வி.வெங்கட்