தொடர்கள்
Published:Updated:

கலாய் கவிதைகள்!

கலாய் கவிதைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கலாய் கவிதைகள்!

ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

கலாய் கவிதைகள்!

`மீன்பிடித்து மீண்டும்
ஆற்றில் விட ஆசை’
பாடியவனைத்
தலையில் குட்டி
பக்கத்திலிருந்தவன் சொன்னான்
``முண்டம்... முதல்ல தண்ணி வருதா பாரு!’’


- சிமி ஜீயோன்

கலாய் கவிதைகள்!

ளவுக்கு மிஞ்சினால்
டுவிட்டும்
தெவிட்டும்!


- வீ. விஷ்ணு குமார்

கலாய் கவிதைகள்!

துக்கம் தொண்டையை அடைக்க
விரக்தியிலும் வேதனையிலுமே பார்க்கவேண்டியுள்ளது
கல்யாண ஆல்பத்தை.


-தி.சிவசங்கரி

கலாய் கவிதைகள்!

கோவிலில்
கழற்றி விடப்பட்ட செருப்பு
காணாமல் போயிருந்தது
பக்தியும்
கூடுதலாக...


-சீர்காழி வி.வெங்கட்

கலாய் கவிதைகள்!

“என்னிடம் உங்கள் இருவரின்
பருப்பும் வேகாது...”
மீட்டிங்கில் சூடு பறக்க
பேசிக் கொண்டிருந்தார்
‘குக்கர்’ சின்னத்தில்
ஜெயிச்ச தலைவரு..!


-கே.லக்‌ஷ்மணன்.

கலாய் கவிதைகள்!

டை மாஸ்டருக்கு
பூரி போட வராதாம்
கற்றது  கையளவு!


 -அதிரை யூசுப்

கலாய் கவிதைகள்!

வீறுநடை போட்டவனும்
குடிச்சாப் போதும்
‘பீரு’ நடைதான்!


-  ப்ரணா

கலாய் கவிதைகள்!

சூரனை வதம் பண்ணினால் அது சூரசம்ஹாரம்;
கணவனை மனைவி
வதம் பண்ணினால் அது சூர‘சம்சாரம்’.


- தொண்டி முத்தூஸ்

தைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதுவதே கலாய் கவிதைகள். இதை அனுபவிக்கணும், தேவையில்லாம ஆராயக்கூடாது!

வாசகர்களே, உங்கள் கற்பனையைத் தட்டிவிட்டு கலாய் கவிதைகளை kalaikavidhaigal@vikatan.com-க்கு அனுப்புங்கள்.  பிரசுரமாகும் ஒவ்வொரு கவிதைக்கும் 500 ரூபாய் பரிசு!