தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: ரவி

ஜோக்ஸ் - 2

“புறமுதுகிட்டு ஓடி வந்த மன்னருக்கு ஏன் பாராட்டு விழா எடுக்கிறார்கள்?”

“மன்னர் பரம்பரையிலேயே, போர்க்களத்தில் இருந்து விரைவாக ஓடி வந்ததில் ரிக்கார்டு பிரேக்காம்!”

- ரவிகிருஷ்

ஜோக்ஸ் - 2

“உங்க படம் கின்னஸ் ரிக்கார்டாமே?”

“ஆமா... ‘படத்தோட கதை என்னோடது’னு நூறு பேர் கேஸ் போட்டுட்டாங்க!”

- அம்பை தேவா

ஜோக்ஸ் - 2

“மன்னர் எதிரியிடம் எப்படி அகப்பட்டார்?”

“ ‘ஒரு சிங்கம் இங்கு உறங்கி கொண்டிருக்கிறது’ என்று பதுங்கு குழி வாசலில் போர்டு மாட்டியிருந்தாராம்..!”

- சி.சாமிநாதன்,

ஜோக்ஸ் - 2

“அது திருடன் வீடுன்னு எப்படி சொல்றிங்க?”

“பாருங்களேன்... வீட்டுச்செவுத்துல ‘முற்பகல் செயின் பிற்பகல் வளையல்’னு எழுதி வெச்சிருக்கு.”

- வி.சாரதி டேச்சு