தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: ரமணன்

ஜோக்ஸ் - 3

“ஆற்றை ஆழப்படுத்தியது ஒரு குற்றமா?”

“மணல் அள்ளிட்டு எப்படி சமாளிக்கறார் பாரு!”

-வி.சகிதாமுருகன்

ஜோக்ஸ் - 3

“இந்த ஊரிலேயே அதிக குற்றங்கள் செய்து, முதலிடத்தில் இருக்கிறாய்.”

“ஐ.பி.எல்ல தர்றமாதிரி ‘ஆரஞ்சு கேப்’ கிடைக்குமா எசமான்..?”

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ் - 3

“யோவ்... போன மாசம் கைமாத்தா பத்தாயிரம் ரூவா வாங்கிட்டு போனியே... ஞாபகம் இருக்கா?”

“தேர்தலப்போ டெபாசிட் கட்டுனதா நெனச்சுக்கங்க தலைவரே!”

-அஜித்

ஜோக்ஸ் - 3

“அந்த டாக்டர் ஒரு அரசியல்வாதினு எப்படி சொல்றே?”

“நோயாளி உயிருக்குப் போராடுறார்னு சொன்னா  ‘போராட்டத்துக்கு அனுமதி வாங்கிட்டாரா?’னு கேக்குறாரு!”

​-மாணிக்கம்