சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 1

``இரண்டு துணை முதல்வர், ஒரு இணை பிரதமர், ஒரு கூடுதல் கவர்னர் கொடுத்தால்தான், ஆதரவுக்கு சம்மதிப்பாங்களாம். என்ன செய்யலாம் தலைவரே?’’

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 1

``பொண்ணு குணம் எப்படி!’’

``நல்ல பொண்ணு. செல்போன் இல்லாம, இரண்டு மணி நேரம் கூட இருப்பான்னா பார்த்துக்கோங்க!’’

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 1

``ஆட்டோவில் ஏறும்போது எழுபது ரூபாய் சொன்னீங்க. இப்ப  நூறு ரூபா கேட்கிறீங்களே, நியாயமா...?’’

''ஆன் தி வேல பெட்ரோல் விலை ஏறிட்டதா இப்பதான் சார்  நியூஸ்  வந்தது...’’

- அதிரை யூசுப்

ஜோக்ஸ் - 1

“அவர் லோ பட்ஜெட்டில் மணல் கடத்தல் பிசினஸ் பண்றார்”

“அதுக்காக மணல் வேணும்னு கேட்டா எத்தனை சூட்கேஸில வேணும்னு கேட்கறது டூ மச்!”

- S.P.வளர்மதி