பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

" கொடுத்த  டயலாக்கோடு ரெண்டு வார்த்தைகளைச் சேர்த்துப்  பேசி தலைவர் குழப்பிட்டாருன்னு எதை வெச்சுச் சொல்றே? "

" கலவரத்துக்கு காரணம் சமூக, அறிவியல், கணித விரோதிகள்னு பேசிட்டார்! "


- ஏந்தல் இளங்கோ

ஜோக்ஸ் - 2

"நாங்கள் நடத்திய போட்டி சட்டசபை க் கூட்டத்திலும் கடமை தவறாமல் வழக்கம் போல வெளிநடப்பு செய்தவர் எங்கள் எம்.எல்.ஏ. என்பதை பெருமையுடன் தெரிவித்துக்..."

- திருமாளம் எஸ்.பழனிவேல்

ஜோக்ஸ் - 2

“தலைவர் சினிமாவில இருந்துதான் அரசியலுக்கு வந்தார்.”

“இருக்கட்டுமே. அதுக்காக ‘மகளிரணித் தலைவி பதவிக்குப் புதுமுகம் தேவை’ன்னு விளம்பரம் பண்றது நல்லாவா இருக்கு?”

- எஸ்.முகம்மது யூசுப்

ஜோக்ஸ் - 2

“படிக்கிற பையனுக்கு எதுக்கு காஸ்ட்லி செல்போன் வாங்கிக் கொடுத்தீங்க?”

“அதுலதான் கால்குலேட்டர் இருக்குன்னு சொன்னான்... அதான் வாங்கிக் கொடுத்தேன் .”

- வி.சாரதி டேச்சு