பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 4

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 4

``தலைவர் பேசி முடித்து விட்டபடியால், காற்று வாங்க வந்து ஒளிந்திருப்பவர்கள் தைரியமாகக் கடற்கரைக்கு வரலாம் என்பதை...”

- பர்வீன் யூனுஸ்.

ஜோக்ஸ் - 4

``போய்வர பெட்ரோல் படி கொடுத்திட்டிருந்த என் கம்பெனியில அதை கட் பண்ணிட்டு கார் கொடுத்துட்டாங்க!"

``ஏன்?”

``காஸ்ட் கட்டிங்காம்!”


- அஜித்

ஜோக்ஸ் - 4

``டாக்டர் அந்த பேஷன்ட் அபாயக் கட்டத்தை தாண்டிட்டாரு ...”

``நான் அவரை கம்ப்ளீட் ரெஸ்ட்ல இருக்கச் சொன்னேனே, ஏன் அவரு தாண்டினாரு?”


- வி.சாரதி டேச்சு

ஜோக்ஸ் - 4

``நேற்று இந்த மைதானத்தில் பேசிய மாற்று கட்சி நண்பர், நான் அடிக்கடி கட்சி மாறுவதாக மேடையில் பேசினாராம். நான் எப்போதும் ஆளும் கட்சியில்தான் இருக்கிறேன். ஆனால் அந்த நண்பர்தான் ஆளும் கட்சி, எதிர் கட்சி என்று மாறி மாறி இருந்து வருகிறார் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்!”

- கே.சி.நாராயணன்