பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 1

“மன்னா எதிரிநாட்டு மன்னர் நமது ராணியைக் கடத்த திட்டமிட்டு இருக்கிறார்”

“மந்திரியாரே, இந்தத் தகவல் நமக்குள்ளேயே இருக்கட்டும். ராணிக்குத் தெரிந்தால் உஷாராகி விடுவார்.”

- மகிழினி மணி.எம்

ஜோக்ஸ் - 1

“என் செல்போன்ல இன்கமிங் கால் வந்தாகூட காசு போகுது”

“அது எப்படி ?”

“என் மனைவி போன் பண்ணி எதையாவது வாங்கி வரச் சொல்வாளே’’


- வி.சாரதி டேச்சு

ஜோக்ஸ் - 1

“தலைவர் ஏன் அந்தப் பிச்சைக்காரனை அடிச்சு விரட்டச் சொன்னாரு?"

“கஞ்சி ஊத்துங்க,கூழ் ஊத்துங்கன்னு கேட்டு சிறை வாழ்க்கையை ஞாபகப்படுத்தினா கடுப்பு வராதா, பின்னே?"

- வி.ரேவதி

ஜோக்ஸ் - 1

``என்னங்க, பீரோவில் இருந்த என்னோட மொத்தப் புடவையும் திருடு போயிடுச்சு. சீக்கிரம் வாங்க போகலாம்”

“எங்கே, போலீஸ் ஸ்டேஷனுக்கா ?”

``இல்லை புடவைக் கடைக்கு...”

- வி.சாரதி டேச்சு