
ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

`காலா?’
என்று கேட்டேன்
‘ ஆமா கால்!’ என்றார்
எந்தக் கால்
என்று நான் கேட்கவில்லை
அவர் சொல்லவுமில்லை!
- பிரேம்

மரிக்கொழுந்து வாசம் வந்ததுமே
பாயசத்தைக் கொட்டியிருக்கலாம்
பாசம் நாக்கை மறைச்சிடுச்சு
நாட்டாமைக்கு!
- அம்பிகா

ட்ரம்பும் கிம்முமே ஒண்ணாகிட்டாங்க.
நாம எப்போ பேரன்பே..?
- லவ் குரு

பயணங்கள் முடிவதில்லை
என்பது போய்
பயணங்களில் முடிவதில்லை
என்றாகிவிட்டது
உடல்நிலை...!
- சஞ்சீவி பாரதி

காதல் கவிதை
எழுதி அனுப்பினால்
கலாய் கவிதையாகப்
படித்துச் சிரிக்கிறாள்!
- எம்.விக்னேஷ்

பெண்ணின் மனதைவிட
புரிந்துகொள்ளக் கடினம்
எல் போர்டு போட்டு
வண்டி ஓட்டுபவர் மனது.
- யாரோ

காதலியின் கல்யாணத்துக்குப்
போட்டுச் செல்லும் ஆடை
மாடியில் காய்கிறது.
வெளியே அடைமழை!
- சமர்

ஒன் சைடு பேப்பர்
ஒன் சைடு லவ்
இவற்றுக்குப் பின்னால்
இடம் காலி இருக்கிறது!
- எம்.விக்னேஷ்
வாசகர்களே, உங்கள் கற்பனையைத் தட்டிவிட்டு கலாய் கவிதைகளை kalaikavidhaigal@vikatan.com-க்கு அனுப்புங்கள். பிரசுரமாகும் ஒவ்வொரு கவிதைக்கும் 500 ரூபாய் பரிசு!
எதைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதுவதே கலாய் கவிதைகள். இதை அனுபவிக்கணும், தேவையில்லாம ஆராயக்கூடாது!