
News
ஓவியங்கள்: கண்ணா

`` மனைவி காணாமப்போனதைப் புகார் பண்ணிட்டு டாஸ்மாக் வந்துட்டீங்களே ஏன் ?”
“நண்பர்கள் ட்ரீட் கேட்டாங்க... அதான்!”
- மைக்கேல் அருள்ராஜ்

“ஹலோ... உங்க பையனை நாங்க கடத்தி வெச்சிருக்கோம்.. பத்துலட்சம் தந்தாதான் விடுவோம்...”
“ இதையேதான் அவன் ஸ்கூல்லயும் கேட்குறாங்க...நாங்க யாருக்குப்பா தர்றது?”
- யுவகிருஷ்ணா

"ஒரு நடிகரை நம்ம கட்சிக்குத் தலைவராக்கினது தப்பாப்போச்சா... எப்படி?! "
`` ‘அநீதிக்கு எதிரா நீங்க குரல் கொடுக்கணும்’னு சொன்னதுக்கு, `சரி ரெக்கார்டிங்கை எங்க வெச்சுக்கலாம்?’னு கேட்கிறார்! "
- எஸ் கோபாலன்

``பறிகொடுத்த பர்ஸ்ல என்ன வச்சிருந்தீங்க ?”
``அது உள்ளே எவ்வளவு இருக்குனு பார்க்கறதுக்குள்ள வேற எவனோ அடிச்சிட்டான் சார்! ”
-மைக்கேல் அருள்ராஜ்