சினிமா
Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

"மூணு மணிக்கு  என்னை  எழுப்பிவிடுங்க. நான்  கடலூர்ல இறங்கணும்”

"அதுக்கு முன்ன நான் சீர்காழியிலே இறங்கிடுவேனே..."

"பரவாயில்லை...  இது  என் செல் நம்பர் .  கால் பண்ணி எழுப்பிவிடுங்க..."

- அதிரை யூசுப்

ஜோக்ஸ் - 3

" நான் லஞ்சம் வாங்கறதை விட்டு  இன்னையோடு மூணு மாசம் ஆயிடுச்சு."

" திருந்திட்டீங்களா?"

"ரிட்டையர்ட் ஆயிட்டேன் !"

- வி.ரேவதி, தஞ்சை

ஜோக்ஸ் - 3

"தலைவர் கூட்டத்துக்கு வர சம்மதிச்சிட்டாரு!"

"வரேன்னு சம்மதிச்ச கூட்டம் இனி வராதே!"

- அஜித்

ஜோக்ஸ் - 3

“மத்தியில உள்ளவங்களுக்குத் தலைவர் இப்படி பயப்படக் கூடாது!”

“ஏன் சொல்றீங்க?”

“மீட்டிங் மேடையில ‘மைக் டெஸ்டிங் ஏக், தோ,தீன்’னு சொல்றாரே!”


- எஸ்.முகம்மது யூசுப்