Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2

“என்னப்பா சர்வர்! பேப்பர் ரோஸ்ட்ல ஓரமா கொஞ்சம் கிழிஞ்சிருக்கு...?”

“நான்தான் சார் ‘பில்’ எழுதுறதுக்காகக் கொஞ்சம் கிழிச்சுக்கிடேன்!”

- மேல்மங்களம் பத்ரா

ஜோக்ஸ் - 2

“மாற்றி மாற்றி அந்தக் கிராமத்திலேயே திருடியிருக்கீங்களே...?”

“அந்தக் கிராமத்தை நாங்க தத்து எடுத்திருக்கோமுங்க!”

- கீழை. அ. கதிர்வேல்

ஜோக்ஸ் - 2

“ஏம்பா பியூன்! இந்த ஆபீஸில லஞ்சம் வாங்க முடியாதுன்னு கேள்விப்பட்டேனே?”

``யார் சார் அப்படி அவதூறா இந்த ஆபீஸைப் பற்றிச் செய்தி பரப்பிவிட்டது?”

- மணியன் தர்மலிங்கம்