Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1

"பக்கத்து மாநில எம்.எல்.ஏக்கள் கிட்டேயே நம்ம தலைவர் தன்னோட  கைவரிசையைக் காட்டிட்டாராமே...?”

 "ஆமாமா... இங்கே சம்பள உயர்வு அதிகம்... தமிழ்நாட்டு சட்டசபைக்கு டிரான்ஸ்பர் வாங்கித் தர்றேனு பெரிய தொகையைப் போட்டுத் தள்ளிட்டாராம்..."

- பழ.அசோக்குமார்

ஜோக்ஸ் - 1

“உங்க வீட்டுக்கு வந்த திருடனுக்கு வழுக்கைத் தலைன்னு எப்படிச் சொல்றிங்க?”

“நான் வீட்டுல கழட்டி வைச்சிருந்த விக்கையும் தூக்கினு போய்ட்டான் சார்.”

- தீபிகா சாரதி

ஜோக்ஸ் - 1

"இத்துடன் கூட்டம் கலைகிறது!"

"யோவ்! அடுத்ததா தலைவர் பேசுவாரு!"

"அதைத்தான் நானும் சொன்னேன்யா!"

- அஜித்

ஜோக்ஸ் - 1

"முல்லைக்குத் தேர் ஈந்தான் பாரி..இதிலிருந்து என்ன தெரிகிறது?"

"அவன், பசுமைவழிச் சாலைக்கு எதிரானவன்னு தெரியுது சார்!"

- பர்வீன் யூனுஸ்

ஓவியங்கள்: கண்ணா