பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 1

"நர்ஸ், காலையில் அட்மிட் ஆன பேஷன்ட் இப்ப எங்கே?"

"இங்கே ரூம் வாடகை ரொம்பவே அதிகமாய் இருக்காம்.  பக்கத்தில் இருக்கிற ஃபைவ் ஸ்டார் ஓட்டல்ல தங்கிட்டு அப்பப்ப வரேன்னு சொல்லிட்டுப் போயிருக்காரு."

- ஆர்.விஸ்வநாதன்

ஜோக்ஸ் - 1

 "வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர்ன்னே கதியா இருக்கற மக்களை அதுலேர்ந்து மீட்டெடுத்துட்டு வரணும்ய்யா! "

"நீங்க மீட்டிங்ல பேசறதை அடிக்கடி அதுலே ஃபார்வர்டு பண்ணிடலாம் தலைவரே!”

- எஸ் கோபாலன்

ஜோக்ஸ் - 1

"இந்தப் போரின் முடிவு என்னவாக இருக்கும் அமைச்சரே...?"

"நம் ஓட்டப்பந்தயமாகத்தான் இருக்கும் மன்னா..."

- கு.ஆராவமுது

ஜோக்ஸ் - 1

“நம் போர்வீரர்கள் அனைவருமே தளபதிகள்தான் என்கிறாரே மன்னர்... என்னவாம்?”

“தளபதி பேப்பர் போட்டுவிட்டாராம்!”

- ரா.பிரசன்னா