பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

“கட்சி இப்ப யார் கட்டுப்பாட்டில் இருக்கு ?”

“ரெய்டு அதிகாரிகள் கைல தலைவரே!”

- அம்பை தேவா

ஜோக்ஸ் - 3

"முன்னெச்சரிக்கையோடு செயல்படுவதில் நம் மன்னரை மிஞ்ச ஆளில்லையா.. எப்படிச் சொல்கிறாய்?"

"அமைதிக்கான நோபல் பரிசுக்கு எதிரி நாட்டு மன்னனின் பெயரைப் பரிந்துரைத்திருக்காரே!"

- அஜித்

ஜோக்ஸ் - 3

"எக்ஸ்ரே, ஸ்கேன் ஓகே... போட்டோ எடுக்கணும்னு சொல்றீங்களே டாக்டர்?"

"கிளினிக்ல புதுசா ஸ்டுடியோவும் ஆரம்பிச்சிருக்கோமே!"

- அஜித்

ஜோக்ஸ் - 3

“அவர் போலி வாஸ்து நிபுணர்னு எப்படிச் சொல்றீங்க...?”

“வாஸ்துபடி, எங்க வீட்டுக் கிணறு மொட்டை மாடியிலதான்  இருக்கணுமாம்...”

- யுவகிருஷ்ணா