
ஓவியங்கள்: கண்ணா

"என்னப்பா இது....ஹேர் கட்டிங் புது ஸ்டைலா இருக்கு..?'’
"இதுதான் சார். எட்டு வழிச்சாலை கட்டிங்...உள்ளே இருக்கிற பேன்கள் எல்லாம் டிராபிக் நெரிசல் இல்லாம ரொம்ப வேகமாப் போறதுக்குத்தான்."
- பழ.அசோக்குமார்

"தேர்தலைக் கண்டு எங்கள் தலைவருக்குப் பயமா? பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வையே பத்து முறை பயமில்லாமல் எதிர்கொண்டவர் எங்கள் தலைவர் என்பதை எதிர்க்கட்சியினருக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்..."
- பழ.அசோக்குமார்

"நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துறதுக்கு எதுக்கு தலைவரே எதிர்ப்பு தெரிவிக்கறீங்க?"
"என்னை முதல்வர் ஆக்குறதா, பிரதமர் ஆக்குறதான்னு மக்கள் குழம்பிப்போயிடுவாங்கய்யா!"
- அஜித்

"தலைவர் ஓவரா வெளிநாட்டுப் பயணம் போனதால வந்த வினை இது!"
"என்ன பண்ணுனாரு?"
"நேரா போய் லெஃப்ட் எடுத்தா லண்டன் வரும்னு பைலட்டுக்கு ரூட் சொல்லி சாகடிக்கறாரு!"
- அஜித்