சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

``சேர் வாடகைக்கு விடறவங்ககூட நம்மளைக் கேலி பண்றாங்க தலைவரே...’’

``என்ன ஆச்சு?’’

ஜோக்ஸ் - 2``உபயோகிக்காமல் திருப்பித் தர்றதால நம்ம கட்சிக்கு மட்டும் 25 சதவிகிதம் தள்ளுபடியாம்.”

- கமலக்கண்ணன்.இரா

ஜோக்ஸ் - 2

``ஒரு நிமிஷத்துக்கு மேல தலைவர் எந்தக் கூட்டத்துலேயும் பேசவே மாட்டாரு!’’

``ஏன்?’’

``அதுக்குள்ள கூட்டம் கலைஞ்சிரும்!’’

- அஜித்

ஜோக்ஸ் - 2

``ஏதுய்யா இவ்வளவு பட்டாசு?’’

`` `ஜெயிச்சா வெடிக்கலாம்’னு கடந்த ஆறு தேர்தலா வாங்கி வெச்சதுதான் தலைவரே!’’

- அஜித்

ஜோக்ஸ் - 2

 ``தலைவர் வீட்டுக்கு எப்படி ரெய்டு வந்தது?’’

``பின்ன, '500 கோடி மதிப்புள்ள சொத்தைப் பாதுகாக்க நம்பிக்கையும் நாணயமும் மிக்க பினாமி தேவை'ன்னு பத்திரிகையில் விளம்பரம் குடுத்தா ரெய்டு வராமயா இருப்பாங்க?!’’

- க.சரவணகுமார்