சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 1

"தலைவரே இதுவரை எதிர்க்கட்சிமீது 100 தடவைக்கும் மேல மானநஷ்ட வழக்கு போட்டீங்கல்ல?"

"ஆமாய்யா. இப்ப அதுக்கென்ன?"

" 'மானம் இன்னுமா மிச்சம் இருக்கு?'ன்னு நீதிபதி கேட்கிறார் தலைவரே."

- க.சரவணகுமார்

ஜோக்ஸ் - 1

“பொண்ணு பிடிச்சிருக்கா?”

ஜோக்ஸ் - 1



“பொண்ணு போட்டோவை ஃபேஸ்புக்ல போட்டிருக்கோம். லைக்ஸ் வர்றதைப் பொறுத்து முடிவைச் சொல்றோம்!”

- அஜித்

ஜோக்ஸ் - 1

“சர்வர் எதுக்கு உன்னைத் திட்டினாரு?”

“ஒரு இட்லிய டிப்ஸா குடுத்தேன்!”

- சி.சாமிநாதன்

ஜோக்ஸ் - 1

“போர் என்று வந்தால் பல உயிர்கள் போகத்தான் செய்யும்.’’

 ``அதுதான் மன்னா, உங்கள் உயிர் மட்டும் ஏன் போவதில்லை என மக்கள் கேட்கிறார்கள்!’’

- மகிழினி மணி. எம்