சினிமா
Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

``இதுதான் புதுசா வந்திருக்கிற OTP வெடியா...?”

``ஆமாங்க.. திரி பத்த வச்சவுடனே மொபைலுக்கு நாலு நம்பர் வரும். அதைச் சொன்னால்தான் வெடிக்கும்!”

- வேம்பார் மு.க.இப்ராஹிம்

ஜோக்ஸ் - 3

``இவர் ஹைடெக் ஜோசியரா... எந்த  விதத்துல?”

``வாட்ஸ் அப்  ஸ்டேட்டஸ்  பார்த்தே எதிர்காலம் பற்றிச் சொல்வாரு!”

- அதிரை யூசுப்

ஜோக்ஸ் - 3

``அணைக்கு எப்படிக் காய்ச்சல் வந்ததோ, அதேபோல கோயில் சிலைகளுக்குக் குளிர் அடிக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் சிலைகளைக் கடத்திப் புதைத்து வைத்திருக்கிறார் என் கட்சிக்காரர்!''

- மகிழினி மணி.எம்

ஜோக்ஸ் - 3

“என் கல்யாணத்துக்கு அப்புறம் சினிமாவில நடிக்க மாட்டேன்!”

“கல்யாணத்துக்கு முந்தி நடிக்கவா செய்தீங்க?”

- எஸ். முகம்மது யூசுப்