சினிமா
Published:Updated:

ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 4

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 4

``என்ன அமைச்சரே. மாதம் மும்மாரி மழை பொழிகிறது போல..?’’

``நாசமாப்போச்சு... உங்க போதை தெளிய நான்தான் தண்ணியைத் தெளிச்சிகிட்டு இருக்கேன் மன்னா!’’

 -  வேம்பார்.மு.க.இப்ராஹிம்

ஜோக்ஸ் - 4

``பொண்ணு பார்க்க வந்தவர் சினிமாத் துறையிலே இருக்கார்னு எப்படித் தெரிஞ்சுகிட்டே?’’

``பொண்ணு எப்படின்னு கேட்டதுக்கு ஃபர்ஸ்ட் லுக் ஓகேன்னு சொல்றாரே!’’

- எஸ்.கோபாலன்

ஜோக்ஸ் - 4

"எதற்கு  மந்திரியாரே இந்தப்  புறாவை மட்டும்  விலை அதிகம்  கொடுத்து  வாங்கி  வந்திருக்கீங்க..?"

"இது ஸேம் டே டெலிவரி  பண்ணுமாம் மன்னா..."

- அதிரை யூசுப்

ஜோக்ஸ் - 4

 ``இந்த  டாக்டர்  ஒரு  விஜய்  ரசிகர்னு எப்படிச்  சொல்றே..?"

``தும்மல்  வராம உம்முனும்...

 இந்த மருந்தை கம்முனும் சாப்பிடுங்க, ஜம்முனு வாழலாம்னு சொல்றாரே..."      
  
 - அதிரை யூசுப்