
News
ஓவியங்கள்: கண்ணா

“கூட்டணிக்கு யாருமே வரலைன்னதும் ரொம்ப அப்செட் ஆன தலைவர் அதிரடியா ஒரு முடிவெடுத்திருக்கார்!”
“என்னென்னு...?”
“கட்சியை ரெண்டா உடைச்சு, கூட்டணி உருவாக்கிக்கப் போறாராம்.”
- அதிரை யூசுப்

“தலைவர் பெயர் வைத்து முடித்ததும், குழந்தைகளின் உடைமைகளை பெற்றோர் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்!”
- பர்வீன் யூனுஸ்

“இங்க தலைவர் உண்ணாவிரதம் இருக்கற இடத்தை எப்படிக் கண்டுபிடிக்கறது?”
“அங்கே ஸ்விகி ஆட்கள் நடமாட்டம் அதிகமா இருக்கும்!”
- இரா.இரவிக்குமார்

“குற்றப்பத்திரிகையோட கடைசி வரியில ஃபுல் ஸ்டாப்பே வைக்கலியே?”
“நீங்க நிறுத்துனாதானே வைக்கறதுக்கு தலைவரே!”
- அஜித்