சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 4

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 4

“பள்ளிக்கூடத்தில  அரசியல்வாதிகளை, பாடம் நடத்த விட்டது தப்பாப் போச்சுங்க..”

“ஏன் என்னாச்சு..”

“ `நூறிலிருந்து இருபது போயிடுச்சு. அதுக்குப் பேர் என்ன?’னு கேட்டா..’‘தகுதி நீக்கம்’-னுல சொல்றான்!”

- பழ.அசோக்குமார்

ஜோக்ஸ் - 4

“ ‘இந்த மாதிரி ஒரு பொதுக்கூட்டத்தை பார்த்ததே இல்லை’னு சொல்ற அளவுக்குக் கூட்டம் இருக்கணும்!”

“இப்பவும் அப்படித்தான் சொல்றாங்க தலைவரே! நம்ம கட்சிக்குக் கூட்டத்தைப் பார்த்ததே இல்லைனு!”

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 4

“சி.பி.ஐ என்றொரு அமைப்பு இல்லாவிட்டால் எப்போதோ நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறி இருப்போம் மக்களே...!”

- அஜித்

ஜோக்ஸ் - 4

“மன்னர் ஏன் குஷியாக இருக்கிறார்?”

“சென்ற போரை விட இந்த முறை ரன் ரேட் அதிகமாம்!”

- தஞ்சை சுபா