
News
ஓவியங்கள்: கண்ணா

“மன்னா! ராணி எதிரிநாட்டு மன்னரிடமிருந்து தப்பிவிட்டார்!”
“தப்பியது ராணியல்ல, எதிரிதான் அமைச்சரே!”
- எஸ்.முகம்மது யூசுப்

“தாய்மார்களே… பெரியோர்களே…!
மேடையில் குவிந்திருக்கும் பிரபலங்களே… மற்றும் மேடைக்கு முன் திரண்டிருக்கும் வெற்றிடங்களே...”
- கி.ரவிக்குமார்

“தேர்தல் கமிஷனுக்கு எவ்வளவோ பணத்தை தானமாகக் கொடுத்திருக்கிறேன்...”
“தலைவர் என்ன சொல்றார்?”
“டெபாசிட் கட்டுனதைச் சொல்றார்!”
- அஜித்

“தலைவர்கிட்ட ‘ஆட்சி முக்கியமா, கட்சி முக்கியமா’னு கேட்டியே... என்ன சொன்னாரு?”
“ஆட்சில இருக்கிற கட்சில இருக்கிறதுதான் முக்கியம்னாரு!”
- அஜித்