
News
ஓவியங்கள்: கண்ணா

“ஊழல்வாதிகளுக்குக் கட்சியில இடம் இல்லைன்னு சொன்ன தலைவர், சொன்னதோட நிக்காம செய்தும் காமிச்சுட்டார்!”
“எப்படி?”
“வேற கட்சிக்குத் தாவிட்டார்!”
- அஜித்

“கூட்டணியில் ரெண்டு சீட் தந்ததுக்கு ஒண்ணு போதும்னு தலைவர் சொல்லிட்டாரே!”
“ரெண்டாவது ஆள் தேடுறதவிட இப்படிச் செஞ்சு பெருந்தன்மையானவர்னு பேரைத் தட்டிட்டார்ல!”
- இரா. இரவிக்குமார்

“அரசவையில் ஏன் நிறைய வெளிநாட்டுப் புலவர்களை மன்னர் வைத்திருக்கிறார்?”
“தன்னைப்பாட வரும் புலவர்கள் வேறு நாட்டுப் பாடலைப் பாடிப் பரிசு பெறுவதைக் கண்டுபிடிக்கத்தான்.”
- கு.ஆராவமுது

“டாக்டர் ரவுண்ட்ஸ் வர்ற நேரம் எதுங்க?”
“இந்த நேரம்னு கிடையாது... ஷுகர் கூடும்போது ரவுண்ட்ஸ் கிளம்பிடுவாரு!”
- அதிரை யூசுப்