
News
ஓவியங்கள்: கண்ணா

“படத்தோட கதாசிரியர் இடத்துல பேர் போடாம இருக்கே..?”
“கோர்ட்ல யார் ஜெயிக்கறாங்களோ அவுங்க பேர் போடுவாங்க..!”
- சி.சாமிநாதன்

``பேஷன்ட்டுக்கு நம்பிக்கை வர்ற மாதிரி நாலு வார்த்தை பேசுங்க.”
“ ‘வேற ஹாஸ்பிடலுக்கு உடனே போயிடலாம்’ன்னு சொல்லிட்டேன் டாக்டர்.”
- க.சரவணகுமார்

“இந்த இடத்திற்கு நான் ஒரே நாளில் வந்துவிடவில்லை...”
“ஆமா தலைவரே... சிறுவர் சீர்திருத்தப் பள்ளி, கிளைச் சிறை, மாவட்டச் சிறை, மத்திய சிறையெல்லாம் பார்த்துட்டு அப்புறமாதான் வந்தீங்க...”
- பழ.அசோக்குமார்

“தரகரே... மாப்ளையோட வாட்ஸப் நம்பரை பெண் வீட்டார் கேட்கிறாங்களே ஏன்..?”
“எல்லாம் ‘ஸ்டேட்டஸ்’ பார்த்துக் கல்யாணம் செய்யத்தான் சார்.”
- பழ.அசோக்குமார்