
News
ஓவியங்கள்: கண்ணா

``நடிகரை அரசியலுக்குக் கொண்டு வந்தது தப்பாப் போச்சு’ன்னு ஏன் சொல்றீங்க!”
“ `கூட்டணிக் கட்சிகளுடன் ஒரே மேடையில் நடிப்பது பெரும் சவாலாக இருக்கிறது’ன்னு பேசிட்டார்!”
- கி.ரவிக்குமார்

“அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய கோ - பேக் கட்டவுட் வைக்கப்பட்டது எங்கள் தலைவருக்குத்தான் என்பதைப் பெருமையாகக் கூறிக்கொள்கிறோம்..!”
- தஞ்சை சுபா

``நம்ம தலைவர் தொண்டர்களிடம் கருத்து கேட்டபின் கூட்டணி அறிவிக்கப்போகிறாராம்...’’
``அது ஏன் இவ்வளவு தாமதமாகுது..?’’
``இன்னும் தொண்டர்கள் கிடைக்கலையே...’’
- கமலக்கண்ணன்.இரா

“நான் ஆறு மாசமா வாயே திறக்கறதில்லையே... என் உருவ பொம்மையை எதுக்கு எரிக்கறாங்க?”
“ஸ்டாக் க்ளியரன்ஸாம் தலைவரே!”
- அஜித்