அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 1
ஜோக்ஸ் - 1

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய நிலங்கள்மீது சிறப்புக் கவனம் செலுத்தப்படும்..."

"பட்டா போடுவோம்கிறதை தலைவர் எவ்வளவு பக்குவமா சொல்றார் பாரு..."

- பழ.அசோக்குமார்

ஜோக்ஸ் - 1

"கூட்டணிக்கட்சித் தலைவர்களின் கூட்டம் அதிகமாக உள்ளதால் மைதானத்தில் உள்ள அந்த மூன்று தொண்டர்கள் மேடையில் அமர்ந்து மைதானத்தை அவர்களுக்கு விட்டுத்தரும்படி கேட்டுக்கொள்கிறோம்...!’’

- கோவை.நா.கி.பிரசாத்

ஜோக்ஸ் - 1

"எம்.எல்.ஏக்களாக இருக்கும் கட்சி சீனியர்களின் பிள்ளைகளுக்கு, எம்.பி சீட் கொடுத்ததற்குக் காரணமே மாநில அளவில் வாரிசு அரசியலை ஒழிக்கத்தான் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்."

- அஜித்

ஜோக்ஸ் - 1

“தலைவரே, நம்ம ரெய்டுக்கு பயந்துதான் தேசியக்கட்சியுடன் கூட்டணி அமைச்சிருக்கோம்னு வெளில பேசுறாங்க!”

“அவங்களுக்குத் தெரிஞ்சது அது மட்டும்தான். விடுய்யா!”

- மகிழினி மணி.எம்