
News
ஓவியங்கள்: கண்ணா


“ நான் பேசும்போது ஆரம்பத்துல கல் எறிஞ்சவங்க எதுக்குய்யா மறுபடியும் கல் எறியறாங்க...?”
“அவங்க ‘ ரிப்பீட் ஆடியன்ஸ்’ தலைவரே...!”
- யுவகிருஷ்ணா

"இந்த நாய்க்குட்டியை நான் குழந்தை மாதிரி வளர்க்கிறேன் தலைவரே!"
"அதுக்காக, அதை நீட்டி, பேர் வைக்கச் சொல்றதெல்லாம் ஓவர்யா!"
- பாப்பனப்பட்டு வ.முருகன்

"தலைவர் இப்போது மேடையில் நின்று பேசாமல் உங்களில் ஒருவராக தரையில் நின்றே பேசுவார்..."
"கல்லடியில இருந்து தப்பிக்க என்னென்ன ஐடியாவெல்லாம் பண்றாரு பாரு!"
- அஜித்

"தலைவர் ஒண்ணும் திடீர்னு தேர்தலில் நிற்கணும்னு முடிவு பண்ணலே... "
"பின்னே? "
"எதிர்க்கட்சி எம்.பி.யோட அஞ்சு வருஷ வரவு செலவையெல்லாம் பார்த்துதான் இந்த முடிவுக்கே வந்திருக்காரு..! "
- ஜெ.மாணிக்கவாசகம்