அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

``கூட்டணித் தலைவர்கள் எல்லாம் என்ன பேசிச் சிரிச்சுக்கிறாங்க?’’


``இதுக்கு முன்னால, ஒருத்தரை ஒருத்தர் எப்படியெல்லாம் கேவலமா திட்டிக்கிட்டோம்னு சொல்லிச் சிரிச்சுக்கிறாங்க!’’


- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 2


``ந
மது கூட்டணி 38 தொகுதியிலும் வெற்றிபெறும் என்பதை…!’’

``தலைவரே! 40 தொகுதியிலும்னு சொல்லுங்க!’’

``அதுதான் நமக்கு 2 தொகுதி கொடுத்துட்டாங்களே! அப்புறம் எப்படி 40ம் ஜெயிக்கும்!’’

- கி.ரவிக்குமார்,

ஜோக்ஸ் - 2

``சுயேச்சையா நிற்கறேன்..மறக்காம நீங்க எனக்கு ஓட்டு போடணும்...’’

``அடடா... ரெண்டு நாள் முன்ன வந்திருக்கக்கூடாது? எலெக்ஷன் வேற முடிஞ்சுடுச்சே..!’’

- ஜெ.மாணிக்கவாசகம்

ஜோக்ஸ் - 2

``ஒரு மகிழ்ச்சியான செய்தி... கூட்டணிக் கட்சி நமக்கு முப்பது தொகுதி ஒதுக்கியிருப்பதால், நமது கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் எனப் பெருமையோடு கூறிக்கொள்கிறேன்...!’’

- கோவை.நா.கி.பிரசாத்