கட்டுரைகள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

நாங்களும் கடிப்போம்!

நாங்களும் கடிப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
News
நாங்களும் கடிப்போம்!

சூ.மா.அகல்யா ஓவியங்கள்: அரஸ்

நாங்களும் கடிப்போம்!

யார் சொன்னது விலங்குகளுக்குச் சிரிக்க தெரியாதுன்னு? இது காட்டுப் பத்திரிகையில் வந்த ஜோக்ஸ். அவங்களும் கடிச்சுப்பாங்க... ஜோக் அடிச்சுப்பாங்க!

நாங்களும் கடிப்போம்!

“கஞ்சத்தனமாக விலை குறைவான குளியல் சோப் வாங்காதீங்கன்னு சொன்னா கேட்டீங்களா?’’

“ஏன் என்னாச்சு..?”

“அந்த சோப்பை போட்டுக் குளிச்சா உடம்பில் வரிகள் அழிய ஆரம்பிக்குது!’’

நாங்களும் கடிப்போம்!

“ஐயோ! வயிற்றுவலி தாங்கமுடியலை காப்பாத்துங்க டாக்டர்?”

“நேத்து தலைவலின்னுதானே வந்தீங்க. வயிற்றுவலி எப்போ ஆரம்பிச்சது?”

“நேத்து இங்கே வந்தப்போ உங்க ஹாஸ்பிடல் கேன்டீன்ல சாப்பிட்டுட்டேன்!’’

நாங்களும் கடிப்போம்!

“சட்டையைக் கழற்றதா இருந்தா வீட்டுக்குள்ளே கழற்றுங்க. இப்படி வெளியே கற்றீடி மானத்தை வாங்காதீங்க. பெரிய பாடி பில்டர்னு நினைப்போ!”

நாங்களும் கடிப்போம்!

“நான், டூப்பர் சிங்கர் டைட்டில் வின்னராக்கும்”

“சரிதான் போடா, நான் ‘டான்ஸ் உடான்ஸ் டைட்டில் வின்னராக்கும்!”