சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 1

``இது தானா சேர்ந்த கூட்டம்..!’’

``சரியா சொன்னீங்க தலைவரே...  இவங்க வாரச் சந்தைக்கு வந்தவங்கதான்!’’

- கோவை.நா.கி.பிரசாத்

ஜோக்ஸ் - 1

``நாங்கள் வாக்காளர்களுக்குப்  பணம் கொடுத்ததாக யாராவது நிரூபித்தால்... கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்கிக்கொள்ளத் தயாராய் இருக்கிறோம் என்பதை...’’

- அதிரையூசுப்

ஜோக்ஸ் - 1

``ரிசல்ட் நாள் நெருங்க நெருங்க தூக்கமே வரமாட்டீங்குதய்யா.’’

``உங்களுக்கே இப்படி இருக்குன்னா ஜெயிக்கறவங்களுக்கு எப்படி இருக்கும்னு நினைச்சுப்பாருங்க தலைவரே..!’’

- ஜெ.மாணிக்கவாசகம்

ஜோக்ஸ் - 1

``இந்த காலியான நாற்காலிகளே சாட்சி, எங்கள் கட்சியில் தொண்டர்களுக்குக்கூட நாற்காலி ஆசை இல்லை என்பதை..!’’

- கோவை.நா.கி.பிரசாத்