சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

``மாறி மாறி கூட்டணி அமைப்பதால் எங்களால் யாரையும் பெரிய அளவில் தாக்க இயலாது என்பதால், தேர்தல் கமிஷனைத் தாக்கிப் பேசப் போகிறோம் என்பதை அன்புடன்  தெரிவித்துக்கொள்கிறோம்.’’

- வைகை.ஆறுமுகம்

ஜோக்ஸ் - 2

``சென்ற முறை நீங்கள் வாங்கிய காசுக்குப் போதுமான வாக்குகள் அளிக்காததால் இந்த முறை அதை சமன் செய்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.’’

- வைகை.ஆறுமுகம்

ஜோக்ஸ் - 2

``தலைவர் ஏன் அப்செட்டா இருக்கார்?’’

``ஒரு ஓட்டாவது விழும்னு உத்தரவாதம் கொடுத்தாதான் சின்னம் ஒதுக்க முடியும்னு கறாரா சொல்லீட்டாங்களாம்!’’

- அஜித்

ஜோக்ஸ் - 2

``கடந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்டும் நான் நாடாளுமன்றத்துக்கே போனதில்லை என்று என்மீது குற்றச்சாட்டு சொல்பவர்களைப் பார்த்துக் கேட்கிறேன்... வாரத்தில் ஆறு நாள்கள் கோர்ட்டிலிருந்து சம்மன் வந்தால் நான் எப்படிப் போவேன்?’’

- அஜித்