சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

“அடடே, கரன்ட் போயிருச்சே! ‘அதை’ எடு!’

“நீங்க தேர்தல் அதிகாரியா இருந்திருக்கலாம். அதுக்காக இப்படியா... அதுதான் தேர்தல் முடிஞ்சுபோச்சே, டார்ச்சை எடு’ன்னு சொல்ல வேண்டியதுதானே!”

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 3

‘`ஏதோ ஒரு வேகத்தில் நாங்கள் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் நிறைவேறும் என்று நினைக்கும் அளவுக்கு நீங்கள் விவரம் தெரியாதவர்களல்ல..!’’

- ரியாஸ்

ஜோக்ஸ் - 3

“அங்கே பாண்டி ஆடுற குழந்தை நம் தலைவரோட பேத்தின்னு எப்படிச் சொல்ற?!”

“ரைட்டான்னு கேட்கறதுக்கு பதிலா ரெய்டான்னு கேட்குதே...!”

- கோவை.நா.கி.பிரசாத்

ஜோக்ஸ் - 3

“போர்க்களத்திலிருந்து துவையல், வறுவல், ஒத்தடம் என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளாரே மன்னர்?’’

“அவரை எதிரி மன்னன் வறுத்தெடுத்து, அடித்துத் துவைத்ததையும், வலி தீர ஒத்தடம் தேவைப்படும் என்பதையும் நாசூக்காகத் தெரியப்படுத்துகிறார்.’’

- தஞ்சை சுபா

ஜோக்ஸ் - 3

“எண்ணிப் பாருங்கள் தொண்டர்களே..!”

“எண்ணிப் பார்த்தாச்சு தலைவரே. கூட்டத்துல ஒருத்தன்தான் உட்கார்ந்திருக்கான்!”

- கோவை.நா.கி.பிரசாத்

ஜோக்ஸ் - 3

“இந்த கண்டக்டர் தேர்தல் பணிக்குப்  போயிட்டு வந்தவராம்!”

“இருக்கட்டும்... அதுக்காக சில்லறை பாக்கி தர வேண்டியவங்களுக்கு விரல்ல மை வைக்கிறது டூமச் சார்.”

- அதிரையூசுப்

ஜோக்ஸ் - 3

“புதிய வாக்காளர்கள் நமக்குத்தான் ஓட்டு போட்டிருப்பாங்க!”

“அவங்க போட்டிருந்தாதான் உண்டு. பழைய வாக்காளர்களுக்கு நம்மளைப் பத்தி நல்லா தெரியுமே தலைவரே!”

- அஜித்

ஜோக்ஸ் - 3

“இந்த சம்மர்ல இதுவரைக்கும் போகாத இடத்துக்கு எங்கேயாவது போகணும்னு தோணுது!”

“தொகுதிக்குப் போலாம் தலைவரே!”

- அஜித்

ஜோக்ஸ் - 3

“அந்த நடிகர் தன் கட்சி ஆபீஸ் திறப்பு விழாவை வித்தியாசமா பண்ணியிருந்தார்.”

“எப்படி?”

“தேங்காய்க்குப் பதிலா 108 டிவி உடைச்சார்.”

- அதிரையூசுப்

ஜோக்ஸ் - 3

“எங்கள் தலைவரைப் பார்த்து நல்லவரா எனக்கேட்கும் எதிர்க்கட்சியினருக்கு ஒன்றைத் தெரிவித்துக்கொள்கிறேன்... அவர் ஜெயிலிலேயே நன்னடத்தை கருதி விடுவிக்கப்பட்டவர் என்பதை..!”

- கோவை.நா.கி.பிரசாத்

ஜோக்ஸ் - 3

“என் மச்சான் இருக்கிற இடத்துல கிடைக்காத பொருளே  இல்லையாம்..!”

“அப்படி எந்த ஜெயில்ல இருக்காரு அவர்..?”

- வி. ரேவதி, தஞ்சை

ஜோக்ஸ் - 3

“எதுக்காக அந்த வீட்டுல பூட்டை உடைச்சுத் திருடினே..?”

“சாவி செய்றதுக்கெல்லாம் எங்க எசமான் நேரம் இருக்கு... ரொம்ப டைட் ஷெட்யூல்...”

- யுவகிருஷ்ணா