பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியம்: கண்ணா

“சர்வர், இன்னும் கொஞ்சம் சட்னி கொடு!”

“அவ்வளவுதான் சார். அதுக்கு மேல வேணும்னா ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிக்குங்க!”

ஜோக்ஸ் - 1

-அஜித்

“எங்க ரெண்டு பேருக்கும் மந்திரி பதவி தர்றதா இருந்தா சொல்லுங்க, ஆட்சி அமைக்க ஆதரவு தர்றோம்... “

“சரி..என்ன மந்திரி..? “

“இவருக்கு முதல் மந்திரி, எனக்கு பிரதம மந்திரி..! “

ஜோக்ஸ் - 1

- ஜெ.மாணிக்கவாசகம்

“தலைவர் எதுக்கு டெய்லி ‘எங்களை யாரும் விலை குடுத்து வாங்க முடியாது’னு அறிக்கை குடுத்துட்டு இருக்காரு..? “

“விலை வந்தா போலாம்னுதான்..! “

ஜோக்ஸ் - 1

- ஜெ.மாணிக்கவாசகம்

"போருக்கான ஆயத்தப் பணிகள் இன்னும் துவங்கவில்லையா?"

"ஒரு குழி வெட்டுவதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது மன்னா?"

ஜோக்ஸ் - 1

- அஜித்