பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியம்: கண்ணா

“இந்த டாக்டருக்கு அரசியல்லயும் ஈடுபாடு உண்டு”

“அதான் உங்க பிளட் என்ன குருப்னு கேக்குறதுக்குப் பதிலா எந்த கோஷ்டினு கேட்கிறாரோ?”

ஜோக்ஸ் - 2

- எஸ்.முகம்மது யூசுப்

“தலைவர் கண்டபடி சரித்திரத்தை அடிச்சு விடறாரே...ஏன்?”

“அப்பத்தான் அதற்குப் பதில் சொல்ல, போராட்டம் நடத்தன்னு, மேடை முன்னால கூட்டம் கூடுதாம்! “

ஜோக்ஸ் - 2

- தே.ராஜாசிங்ஜெயக்குமார்

“சுதந்திர இந்தியாவில்...”

“என்னய்யா சொல்ல வர்றே?”

“ யாருமே இல்லாத கூட்டங்களில் அதிகம் பேசினது நீங்கதான் தலைவரே!’’

ஜோக்ஸ் - 2

- ஏந்தல் இளங்கோ

"நல்லவங்க இருக்கிற இடத்துல தெய்வம் தேவையில்ல..."

"எங்கியோ கேட்ட டயலாக் மாதிரியிருக்கு...?"

"இப்படி சொல்லித்தான் கோயில் சிலைகள தலைவர் ஆட்டையப் போட்டாரு ..!"

ஜோக்ஸ் - 2

- சி.சாமிநாதன்