பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 3

ஓவியம்: கண்ணா

``இந்த ஆஸ்பத்திரி வெச்சிருக்கிற டாக்டர் ஏற்கெனவே நகைக்கடை வைச்சிருந்தாரா?’’

``ஏன் கேட்கிற?’’

``எக்ஸ்ரே எடுத்தால் கீ செயின் இலவசம், இசிஜி எடுத்தா பர்ஸ் இலவசம், ஸ்கேன் பண்ணினா சூட்கேஸ் இலவசம்னு போட்டிருக்காங்களே!’’

ஜோக்ஸ் - 3

- ஹெச்.உமர் பாரூக்

“தலைவர் எதுக்கு அந்தக் கணக்கு வாத்தியார் மேல கடுப்புல இருக்காரு?”

“நாற்பதுல நாற்பது போனா எவ்வளவுன்னு இவரைப் பார்க்கும்போதெல்லாம் கேக்கறாராம்!”

ஜோக்ஸ் - 3

- அஜித்

"பேஷன்ட் எப்படி இருக்காரு சிஸ்டர்?"

"தெரியலை டாக்டர். எப்படியோ இன்னமும் இருக்காரு!"

ஜோக்ஸ் - 3

- அஜித்

“தேர்தலில் எதிர்க்கட்சிகள் மண்ணைக் கவ்வும்!”

“அப்போ, நம்ம கட்சி!”

“மண்ணை அள்ளும்!”

ஜோக்ஸ் - 3

- கி.ரவிக்குமார்