சினிமா
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1

`` `என்னை விட்டுவிடு... என்னைவிட்டுவிடு’ என்று எதிரி நம் மன்னரிடம் கெஞ்சினாராமே..?’’

``எதிரியின் காலை கெட்டியாகப் பிடித்துக்கொண்டால், பாவம், என்னதான் செய்வான் எதிரி..?’’

ஜோக்ஸ் - 1

- வி.ரேவதி, தஞ்சை

``இந்தக் கூட்டம் நடத்த அனுமதி கொடுத்த போலீஸார் நிமிடத்துக்கு ஒருமுறை வந்து, `எங்கே கூட்டம்?’      என்று கேட்டு வெறுப்பேற்றுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன்...’’

ஜோக்ஸ் - 1

- அஜித்

``சிஸ்டர்! பேஷன்ட்டோட ஸ்கேன் ரிப்போர்ட்டைப் படிங்க...”

``சட்டை மேல் பாக்கெட்ல புது 500 ரூபாய் நோட்டுல பத்தும், உள்பாக்கெட்ல ரெண்டு 2000 ரூபாய் நோட்டும், பேன்ட்ல கொஞ்சம் சில்லறையும் இருக்குது டாக்டர்...”

ஜோக்ஸ் - 1

- யுவகிருஷ்ணா

``முழுக்க முழுக்க ஃபாரின்ல எடுத்ததா சொன்னீங்க... படத்துல எல்லாமே சென்னை லொக்கேஷன்ஸா இருக்கே?’’``கதையைச் சொன்னோம்!’’

ஜோக்ஸ் - 1

- அஜித்