சினிமா
தொடர்கள்
Published:Updated:

வாசகர் மேடை - வடிவேலுங்குறது பேரு, பட்டம்..?

வாசகர் மேடை - வடிவேலுங்குறது பேரு, பட்டம்..?
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை - வடிவேலுங்குறது பேரு, பட்டம்..?

படம்: ஸ்டில்ஸ் ரவி; ஓவியங்கள்: அரஸ்

வாசகர் மேடை - வடிவேலுங்குறது பேரு, பட்டம்..?

ஸ்கூல் ஆரம்பிச்சாச்சு. எந்த விஷயம் உங்கள் குழந்தைகளைவிட உங்களை பயமுறுத்துது?

பேரன்ட்ஸ் மீட் போட்டு பேரன்ட்ஸைக் கழுவி ஊத்துவது.
எம்.விக்னேஷ், மதுரை

வாசகர் மேடை - வடிவேலுங்குறது பேரு, பட்டம்..?

இன்னும் பத்து நாள்ல ஸ்கூல்ல இருந்து அழைப்பு வரும்... ‘`உங்க பிள்ளையின் படிப்பும் சரியில்ல, பர்ஃபாமன்ஸும் சரியில்ல! இப்ப உங்களை ‘எமர்ஜென்சி கால்’ல தான் கூப்பிட்டிருக்கோம்.! இம்மீடியட்டா அவனுக்கு எல்லா சப்ஜெக்டிலும் தனித்தனியா டியூஷனுக்கு ஏற்பாடு பண்ணணும்... நீங்க பண்றீங்களா, அல்லது நாங்களே அந்த ரிஸ்க்கையும் எடுத்துக்கவா?” என்று முகத்தை உர்ரென்றும் எரிந்து விழுகிற மாதிரியும் வைத்துக்கொண்டு கேட்கும் கிளாஸ் டீச்சரை நினைத்தாலே அலறுகிறது மனசு!
நெல்லை குரலோன்,​ நெல்லை

குழந்தைகளின் புத்தகங்கள், நோட்டுகளுக்கு அட்டை போட்டு, லேபிள் ஒட்டிப் பெயர் எழுதும் வேலைதான் பயமுறுத்துகிறது.
வ.சந்திரா மாணிக்கம், மதுரை

​எந்த நேரத்தில், எந்த அரசு அமைந்து என்ன மாதிரி கல்வி முறை மாறுமோ? ​இந்தப் படிப்பெல்லாம், நுழைவுத் தேர்வுகளுக்குப் பயன்படுமா?
கி.ரவிக்குமார், நெய்வேலி

மெயில்ல வர ஹோம் வொர்க் பிரின்ட் அவுட் எடுத்து விடை கண்டுபிடிக்கணுமே. ஸ்கூல் பெற்றோர் குரூப்ல ‘Please Send Hw’-னு வழியணுமே!
எஸ்.கல்பனா, சென்னை 15​

நீட்டைவிட நீட்டமான தேர்வு எதுவும் வந்துடுமோன்னுதான்!
டி.ஜெயசிங், கோயம்புத்தூர்

ஹோம் வொர்க்கூட கிடந்துபோயிடும். புராஜெக்ட் செய்துட்டு வாங்கன்னு இவிங்க சொல்ற பொருள்கள் எந்தக் கடையில் கிடைக்கும்னு தேடித்தேடி அலைந்து போனால், ‘ஏற்கெனவே நிறைய பேரு வாங்கிட்டுப் போயிட்டாங்க. அடுத்த வாரம் வர்றீங்களா?’ என்ற பதிலை நினைக்கும்போது.
சுந்தரராஜ், நெல்லை​

சில பல போராட்டங்களுக்குப் பிறகு மகனுக்கு ஸ்கூல் யூனிஃபார்ம் மாட்டி ஸ்கூல் கிளம்பும் போது மகன் `அப்பா எனக்கு கக்கா வருது’ன்னு சொல்லுவான். அதை நினைச்சா வயிறு கலக்குது.
 billumohan83

 நாம் கஷ்டமா இருக்குன்னு படிக்காமல் விட்ட பாடங்களைச் சொல்லித்தரச் சொல்லும் போது!
 h_umarfarook

இல்லத்தரசிகளுக்கு “இனி சத்துணவு வாரம், பழைய உணவு வாரம், சாலட் வாரம், ஃப்ரூட்ஸ் வாரம், பயிறு வாரம்”ன்னு ஒவ்வொண்ணா சொல்லி ஒரு வழி பண்ணிடுவாங்களே!
Velanganni Velu

ஒருவேளை ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டால், காங்கிரஸ் தலைவர் ஆவதற்குப் பொருத்தமானவர் யார், ஏன்?

வை.கோ. யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக காங்கிரஸ் தலைவரான வை.கோ, பா.ஜ.க-வுடன் திடீர் கூட்டணி சேர்ந்து அதிர்ச்சி தருவார். தேர்தல் முடிவு வந்தால்தான் தெரியும்... மோடியை காலி பண்ணக் கூட்டுசேர்ந்த  டாப்சீக்ரெட்.
 மல்லிகா அன்பழகன், சென்னை 78

ரஜினிகாந்த். மனுஷன் முடிவெடுக்கிறதுக்குள் அடுத்த தேர்தல் வந்துவிடும். ராகுல் காந்தி மீண்டும் தலைவராகிவிடலாம்.
சுந்தரராஜ், நெல்லை.

செல்லூர்ராஜு. புதுப்புது நவீன விஞ்ஞான யுக்திகளால் காங்கிரசை பலப்படுத்தி விடுவார்.
 கே.எம்.ஃபாருக், சென்னை

கேப்டன் அமரீந்தர்சிங்... பஞ்சாப்பில் மோடியின் வெற்றியைத் தடுத்தவர்.
 dr_jayasuriya

வாசகர் மேடை - வடிவேலுங்குறது பேரு, பட்டம்..?

இளையராஜா இசை - ஒரே வரியில் கவிதையாகச் சொல்லுங்கள்...

இரவின் தாலாட்டு. உலகின் பாராட்டு.
சி.பி.சுந்தரம், சென்னை

சோகம் விரட்டி.
  நெல்லை குரலோன், பொட்டல் புதூர்
இவரது இசை செவியீர்ப்பு விசை.
தஞ்சை தாமு, தஞ்சாவூர்

இளையராஜா வீட்டு இட்லிப் பானையும் இசையமைக்கும்!
  டி.ஜெயசிங், கோயம்புத்தூர்.​
தந்தைப்பால்.
cheyyaruarun

செவியோகா.
 priyam_vasanth

அவர் ‘பாட்டுக்கு’ வாழ்ந்தார், வாழ்கிறார், வாழ்வார்.
 kumarfaculty

பண்ணைபுரம் தந்த எட்டாம் சுரம்;
 qobit

ஒவ்வொரு வரியும் தேன்தான். ஆனாலும் ஏன் வண்டுகளுக்கு வரிவிதிக்கிறாய்?
 Abirami

மனங்கொத்திப் பறவை... ‌மகிழ்ச்சியாக்கும் இரவை..!
Rishivandiya Baskar

செவித் துளை நுழைந்து உயிர் நரம்புருக்கி... நினைவுகள் நேரப்பயணமேறும் மீளவொண்ணாக் கனா..!
Sarala Devi 

தமிழர்களின் அன்றாட வாழ்க்கையை ஆக்கிரமித்திருக்கும் வடிவேலுவுக்குப் புதுசா பட்டம் குடுங்களேன்! (வைகைப்புயல், கறுப்பு நாகேஷ் தவிர)
பாசமிகு நேசமணி.
 ஜி.பிரேமா குரு, சென்னை

மதுரைச்சுனாமி.
 சுந்தரராஜ்,​நெல்லை​

மகிழ்ச்சியானந்தா.
 கயத்தை சத்யா, கும்பகோணம்

பாடி லேங்குவேஜ் பாஷா!
JawaharGanesan

காமெடி கான்ட்ராக்டர்
 balasubramni1

மீம்ஸில் வாழும் மாம்ஸ்.
 parveenyunus

எமோஜி சிவாஜி.
 mohanramko

`மீம்’டாங்காரன்..!
   Laks Veni

மதுரை மீமாட்சி.
 Safath Ahamed

‘ஃபன்’முகக் கலைஞன்!
 Laks Veni

வாசகர் மேடை - வடிவேலுங்குறது பேரு, பட்டம்..?

‘யப்பா சாமி நான் கேட்டதிலேயே அண்டப்புளுகு ஆகாசப்புளுகு இதான்யா’ன்னு சொல்ற அளவு நீங்க கேட்ட பெரிய பொய் எது?

​நான் நடிக்க வராமல் இருந்திருந்தால் டாக்டர் ஆகியிருப்பேன்.
கல்பனா குணசேகரன், சென்னை

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்.
கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி

சுவிஸ் வங்கிக் கறுப்புப்பணத்தை மீட்டுவந்து ஒவ்வொரு இந்தியனின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும்.
 ந.ஜெயபால், சென்னை

கல்யாணத்துக்கு முன்னால் எந்த பொண்ணையும் மனசாலகூட நான் காதலிச்சது கிடையாது.
கல்பனா குணசேகரன், சென்னை​
 
100% placement
 Railganesan

 இனி எந்தக் காலத்திலும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது.
 manipmp

எங்க குடும்பத்துலேருந்து வேற யாரும் அரசியலுக்கு வர மாட்டாங்க!
sweetsudha1

நான் படித்துப் பெரிய டாக்டராகி ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் பார்ப்பேன்.
 pachaiperumal23

இன்னும் பத்துநிமிஷத்துல வந்துருவேன்.
Vinoth35655019

அது நான் இல்லை, என் அட்மின் போட்டது!
nandhu_twitts

தூத்துக்குடித் துப்பாக்கிச் சூடு பற்றி நிருபர்கள் கேள்வி கேட்டபோது, உங்களைப் போல் நானும் டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னது.
   Safath Ahamed

இனி அந்நியக் குளிர்பானங்களைக் குடிக்க மாட்டோம் என்று மக்கள் சொன்னதும்... இனி அந்நியக் குளிர்பானங்களை விற்க மாட்டோம் என்று வணிகர் சங்கம் சொன்னதும்.
 Karthik M Somasundaram

“இப்பதான் உனக்கு கால் பண்ணணும்னு நெனைச்சேன்!”
 Sowmya Red

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை - வடிவேலுங்குறது பேரு, பட்டம்..?

? இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு நான்கே வரிகளில் நச்சுன்னு ஒரு குட்டிக்கதை சொல்லுங்க...

? மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பு எது;
மோசமான கண்டுபிடிப்பு எது?

? காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம்... இப்படி எத்தனையோ தினங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டுக்கு ஏற்றவாறு புதிதாக ஒரு தினத்தை உருவாக்கலாம் என்றால் என்ன ‘தினம்’ உருவாக்கலாம்?

? பாகிஸ்தான் டீமுக்கு ஒரு பன்ச்-அறிவுரை, ப்ளீஸ்!

? லஞ்சம் வாங்குபவர்களுக்கு ரேஷன் கார்டு ரத்து தொடங்கி கருட புராணத் தண்டனை வரை பல வித்தியாசமான தண்டனைகளைத் தமிழ் சினிமாவில் சொல்லிவிட்டார்கள். இதுவரை இல்லாத, புதுசா
ஒரு தண்டனை சொல்லுங்க பார்ப்போம்!

வாசகர் மேடை - வடிவேலுங்குறது பேரு, பட்டம்..?

உங்கள்  பதில்களை  அனுப்ப  வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,  சென்னை 600 002.