சினிமா
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

"இதென்ன டாக்டர்... அனஸ்தீஸியா ஃபீஸோட இன்னொரு பில்லையும் சேர்த்திருக்கீங்க...?"

   "மயக்கம் தெளியறதுக்காக தண்ணீர் தெளிச்சதுக்கான சார்ஜ்..."

ஜோக்ஸ் - 2

  - அதிரை யூசுப்

"கூட்டத்திற்கு அனுமதி கொடுத்த போலீஸ் ஏன் கடுப்பாயிட்டாங்க?"

"அப்படியே கூட்டத்தையும் ஏற்பாடு செய்து கொடுங்கன்னு தலைவர் கேட்டுட்டாராம்..!"

ஜோக்ஸ் - 2

- கோவை.நா.கி.பிரசாத்

"ஒரு தேசம், ஒரு தேர்தல் என்கிறதுல தலைவர் உறுதியா இருக்கார்!"

"அதுக்காக நடிகர் சங்கத் தேர்தலையும் நாடாளுமன்றத்  தேர்தலோடு நடத்தணும்னு சொல்றது அவருக்கே ஓவரா தெரியலையா?"

ஜோக்ஸ் - 2

- அஜித்

``எதிரி மன்னனின் பேரைக் கேட்டாலே என் உடல் கொதிக்கிறது அமைச்சரே!”

“விடுங்க மன்னா... அவனை நேரில் பார்க்கும்போது ஜில்லிட்டுவிடும்!”

ஜோக்ஸ் - 2

- அஜித்