
News
என் வக்கீல்கிட்ட கேட்டா, அவரும் முழிக்கிறாரு!
"தலைவருக்கு எதைத்தான் தம்பட்டம் அடிச்சுக்கறதுன்னு தெரியலையா...ஏன்?"
"கட்சிப் பேருக்கு கீழே 'இரண்டு தொகுதிகளில் டெபாசிட் வாங்கிய கட்சி'ன்னு டேக்லைன் போடச் சொல்றாரு!"

- அஜித்
"நீ செய்த குற்றத்துக்கு இந்திய தண்டனைச் சட்டப்படி என்ன தண்டனை தெரியுமா?"
"எங்கேங்க, தெரிஞ்சுக்கலாம்னு என் வக்கீல்கிட்ட கேட்டா, அவரும் முழிக்கிறாரு!"

- அஜித்
"போஸ்ட் ஆபரேஷன் ஸ்கேனா..? அது என்ன டாக்டர்...?"
"உங்க வயித்துக்குள்ள கத்தி, கத்தரி ஏதாவது தங்கிடிச்சான்னு செக் பண்ண...!"

- வி.ரேவதி, தஞ்சை
"டாக்டர் மருந்து கொடுக்கிறதுக்கு முன்னாடி யாருகிட்ட கன்சல்ட் பண்றாரு சிஸ்டர்?"
"பார்மஸிலதான். இந்த மாச டார்கெட் எந்தெந்த மருந்துக்கு இருக்குன்னு கேட்டுக்கிறார்..."

- தஞ்சை சுபா