என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

சிம்பு அப்பாபத்தி மெயில் வரும்!

சார்மி ஷாக்ஆர்.சரண்அட்டை மற்றும் படங்கள் : ஜி.வெங்கட்ராம்

##~##

ரண்டாவது ரவுண்டில் இன்னும் சார்மிங்காக... சார்மி!  

 ''ஜெமினி டி.வி. நடுநிசிப் பாடல்களில் மட்டும்தான் உங்களை இப்போ பார்க்க முடியுது... என்னாச்சு சார்மி?''

''சின்ன கேப் விழுந்திருச்சுல்ல... ஆனா, நான் ஒண்ணும் சும்மா இல்லை. பாலிவுட் பாட்ஷா அமிதாப்கூட நடிச்ச 'புத்தா... ஹோகா தெரா பாப்’ படம் அங்கே செம ஹிட். அமிதாப்பைக் காதலிக்கிற சின்னப் பொண்ணு கேரக்டர். 'க்யூட் லிட்டில் பார்பி டால்’னுதான் அமிதாப்ஜி என்னைச் செல்லமாக் கூப்பிடுவார். அப்புறம் விவேக் ஓபராயோட ஒரு படம், மம்மூட்டிகூட ஒரு படம் பண்ணிட்டு வந்திருக்கேன்.

நடுவுல 'பலே தொங்கலு’, 'கிங்’, 'ரகடா’, 'மகாத்மா’ படங்கள்ல ஃப்ரெண்ட்ஷிப்புக்காக நான் ஆடின அயிட்டம் டான்ஸைத்தான் நீங்க பார்த்திருக்கீங்கனு நெனைக்கிறேன். இப்போ ரவி தேஜாவோட ஒரு படம் கமிட் ஆகியிருக்கேன். அடுத்த வருஷம் முழுக்க நான் நாட் ரீச்சபிள் பிஸி.''  

சிம்பு அப்பாபத்தி மெயில் வரும்!

''தமிழ்ல யார்கூடயாச்சும் டச்ல இருக்கீங்களா? சிம்புகூட நடிச்சிருக்கீங்களே... பேசிக்குவீங்களா?''

''தமிழ்ல பெர்சனல் ஃப்ரெண்ட்ஸ் கிட்டத்தட்ட இல்லை. பிரபு சாலமன் சாரோட 'மைனா’ பார்த்துட்டு வாழ்த்து சொன்னேன். சிம்புகூட 'காதல் அழிவதில்லை’ ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசினதுதான். இப்போ ரீசன்ட்டா ஹைதராபாத்ல ஒரு நிகழ்ச்சியில் சந்திச்சப்போ, ரொம்ப ஃபார்மலா அஞ்சு நிமிஷம் பேசினார். ஆனா, அவரோட அப்பா பத்தி நிறைய ஃபார்வர்டு மெயில்ஸ் வரும். அப்போ சிம்புதான் ஞாபகத்துக்கு வருவார்.''

''ஹீரோயின் கேரியர்ல பாதியைத் தாண்டிட்டீங்க... இன்னும் கிளாமர் இமேஜைத் தாண்டலையே?''

''அதுக்கு நான் மட்டும் காரணம் கிடையாது. ஏஞ்சலினா ஜோலி நடிச்ச 'சால்ட்’ பார்த்திருக்கீங்களா? அப்படி ஒரு படத்துல பறந்து பறந்து சாகசம் பண்ண ஆசைதான். ஆனா, ஹீரோயினுக்கு அப்படி ஒரு  ஸ்க்ரிப்ட் இங்கே யார் கொடுப்பா? அப்படி ஒரு ஸ்க்ரிப்ட்டோட வந்தா, அன்லிமிடெட் கால்ஷீட் கொடுக்க நான் ரெடி. ஏதோ என்னால் முடிஞ்ச வரை தேடிப் பிடிச்சு ஒரு கால் கேர்ள் தொழிலாளி கேரக்டரில் நடிக்க கமிட் ஆகியிருக்கேன். அனுஷ்கா மாதிரி ஒரு ரோல் மாடல் இருக்கும்போது, எனக்கு என்ன கவலை? டைரக்டர் சந்து சாரோட ஸ்க்ரிப்ட் அவ்வளவு சூப்பர். பாலியல் தொழிலாளி ஒருத்திக்கு ஒரு பாடகரோட காதல். அந்தக் காதல் கல்யாணத்தில் முடியுதா, அவளால நார்மல் வாழ்க்கை வாழ முடியுதாங்கிறதுதான் கதை. அந்த கேரக்டர்ல சார்மி இன்னும் கவர்ச்சியா இருப்பானு நம்பி தியேட்டருக்கு வராதீங்க. அதுல இதுவரை நீங்க பார்க்காத சார்மியைப் பார்ப்பீங்க.''

''எப்போ கல்யாணம்?''

''முதல் படத்துல நடிச்சப்போ எனக்கு 14 வயசு. 10 வருசமா நடிச்சுட்டு இருக்கேன். இவ்வளவு சின்ன வயசுல எதுக்குக் கல்யாணம்? இன்னும் பத்து ஹிட்ஸ் கொடுக்கணும். தமிழ்ல ஒரு மெகா ஹிட் கொடுக்கணும். அப்புறம் அதைப்பத்தி யோசிப்போம்!''